ஜுன், 21 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 2:15-25 தனிமை நல்லதல்ல பின்பு தேவனாகிய கர்த்தர், மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். ஆதியாகமம் 2:18 நாய்க்குத் தடுப்பூசி போடுவதற்காக மிருக வைத்தியரிடம் போனபோது, அங்கே ஒரு  நாய்க்குச் சத்திரசிகிச்சை செய்து அதன் கர்ப்பப் பையை அகற்றவதைக் கண்டேன்.  இன்னொரு நாய்க்கு இரத்தப் பரிசோதனை செய்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த போது, மனுஷரைப்போலவே செல்லப்பிராணிகளுக்கும்

ஜுன், 20 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2 சாமுவேல் 24:1-25 பாவத்தை ஒத்துக்கொள்வாயா? இதோ நான்தான் பாவஞ்செய்தேன், நான்தான் அக்கிரமம் பண்ணினேன். உம்முடைய கை எனக்கு… விரோதமாயிருப் பதாக என்று விண்ணப்பம் பண்ணினான். 2சாமுவேல் 24:17 கிறிஸ்தவ தலைமைத்துவத்தில் இருப்பவர்கள், தாங்கள் விடுகின்ற தவறுகளை ஒப்புக் கொள்ள சிலசமயங்களில் பின்நிற்பதுண்டு. தலைமைத்துவத்தில் இருந்துகொண்டு தமது பிழையை ஒப்புக்கொண்டால் தங்கள் மரியாதை குறைந்துவிடும்; பின்னர் தங்களை  பிறர் மதிக்கமாட்டார்கள்

ஜுன், 19 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 5:39-48 யார் தேவனுடைய பிள்ளைகள்? …பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திராயிருப்பீர்கள். அவர் …நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். மத்.5:45 குடும்பத்திலே ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும், அக்குழந்தை யாரைப்போல  இருக்கிறது என்று ஒரு போட்டியே ஆரம்பித்துவிடும். ஒருமுறை ஒரு அப்பா, தன் குழந்தை சிரிக்கும்போது தன்னைப்போலும், அழும்போது அம்மாபோலும் இருப்பதாகக் கூறினார். பாவமனிதராகிய நமக்கே நமது குழந்தைகள் நம்மைப்போலவே

ஜுன், 18 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 18:18-30 யார் இரட்சிக்கப்பட முடியும்? உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்… லூக்கா 18:22 தேவனுடைய செய்தி:  தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லை. தியானம்:  நாம் செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு. தேவையற்ற பொருட்கள்  எல்லாவற்றையும் விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்தால்,  பரலோகத்தில் பலன் கிடைக்கும்.

ஜுன், 17 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 109:1-31 துன்பத்தின் குரல் என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். சங்கீதம் 109:4 மிகுந்த துயரமான நிலையிலிருந்து தாவீது இந்த சங்கீதத்தை எழுதுகிறார். அவரோடே கூட இருந்தவர்களே அவருக்கு எதிராக எழும்பியிருப்பதைத் தாங்கக்கூடாதவராக அவர் புலம்புகிறார். ஆனாலும், அந்தத் துன்பத்தின் மத்தியிலும் தேவன் தனக்கு ஆதரவாக இருக்கிறார் என்ற உறுதியிலிருந்து அவர் சற்றேனும்

ஜுன், 9 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப் 27:6-25 எச்சரிப்புக்குச் செவிகொடு! நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான். அப்.27:11 மலைநாட்டில் வாழுபவர்கள் ஏரிகளில் குளிப்பதற்காகச் செல்வது வழக்கம். ஒருமுறை ஒரு போதகர் ஒரு சகோதரியைப் பார்த்து, இன்று ஏரிப்பக்கம் குளிப்பதற்காகப் போகவேண்டாம், வேறு எங்காவது குளித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அச்சகோதரி தனது சிநேகிதியையும் அழைத்துக்கொண்டு மாலை

ஜுன், 8 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 6:19-21 அழியாத பொக்கிஷம் பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்… மத்தேயு 6:20 நமக்கு மிகவும் பெறுமதியானவை என்று நினைத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த பலவற்றைச் சந்தர்ப்ப சூழ்நிலையால் இழந்துபோன அனுபவம் நமக்கு இருக்கலாம். அல்லது, அவை எம்மைவிட்டுத் தொலைந்துபோனதாகக்கூட இருக்கலாம். சமீபத்தில் வந்த வெள்ளத்தின்போது, ஞாபகத்திற்காகப் பத்திரப்படுத்தி வைத்து, பார்த்துப்பார்த்து மகிழ்ந்திருந்த புகைப்பட அல்பங்களெல்லாம் ஒரு நிமிடத்தில் அழிந்துபோனது என்று

ஜுன், 7 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 3:6-10 நீ எங்கே இருக்கிறாய்? அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, நீ எங்கே இருக்கிறாய் என்றார். ஆதியாகமம் 3:9 இப்பொழுதெல்லாம் அனைவரது கையிலும் எந்நேரத்திலும் தொலைபேசி இருப்பதால், அழைப்புக்களும் ஓய்வில்லாமல் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், நாம் ஒரு நூலகத்தில் இருக்கிறபோதும், படுத்து உறங்கிக்கொண்டு இருக்கிறபோதும், வீட்டில் இருக்கிறபோதும் வருகிறதான தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் பேசுகிற விதங்களில் நிறையவே

ஜுன், 6 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 8:26-30 முற்றுமுழுதுமாக அறிந்தவர் …நாம் ஏற்றபடி, வேண்டிக்கொள்ள …ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ரோமர் 8:26 சாதாரணமாக ஒருவரோடு சம்பாஷிக்கிறபோது, நாம் சொல்லுவதை மற்றவர் புரிந்து கொள்ளக் கடினப்படுவதைக் கண்டால், நாம் மீண்டும் தெளிவாக அதே காரியத்தை அவர் புரிந்துகொள்ளும்படி சொல்லுவதுண்டு. வேறு ஒரு சந்தர்ப்பத்தில், சொல்வதை தவறாகப் புரிந்துகொண்ட ஒருவர் நம்மைப்பற்றி தப்பாக

ஜுன், 5 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 2:1-10 எதிர்மறையான சிந்தனை அப்பொழுது அவன் மனைவி …நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். யோபு 2:9 யோபுவின் வாழ்க்கையைக்குறித்து வேதப்படிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில், யோபுவின் மனைவி யோபுவைத் திட்டியதைக்குறித்துப் பேசப்பட்டது. அப்போது, அங்கிருந்த ஒரு தாயார், “யோபுவின் மனைவி அவளது விரக்தியிலேயே இப்படியாகப் பேசினாள். அதை நாம் குற்றம்