3 ஆகஸ்ட், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 8:10-22 ? பாதிக்கும் விளைவுகள் நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள். 1சாமுவேல் 8:18 ‘நாங்கள் ஆண்டவரின் பிள்ளைகள், கவனமாக உடுத்தவேண்டும்” என்ற அம்மாவின் ஆலோசனையைப் புறந்தள்ளி, தற்காலத்திற்கேற்ற பெஷன் என்று சொல்லி, கவர்ச்சியான ஒரு உடையை விடாப்பிடியாய்த் தெரிவு செய்தாள் ஒரு வாலிப மகள். ஆனால், ‘இதை ஏன் வாங்கினேன்’ என்று வெட்கப்படும்படி வேதனையான சம்பவம் ஒன்று அவளை நிலைகுலையச்

ஜுலை 31, 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ரோமர் 8:15-28 ?♀️  கேள்விகள் எதற்கு? இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். யோவான் 13:7 இயேசு தமது சீஷர்களின் கால்களைக் கழுவ ஆரம்பித்தபோது, சீடர்கள் யாவரும் அவருக்கு இடமளித்தார்கள் (யோவான் 13:1-11). ஆனால் பதட்ட குணமுள்ள பேதுரு, ‘நீரா? என் கால்களையா? கழுவுவதா? நீர் என் குரு; நான் உமது சீஷன்” என்னும்

ஜுலை 30, 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 12:20-33 ?  தேவநாமம் மகிமைப்படட்டும்! …இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ, ஆகிலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். யோவான் 12:27 ஆற்றமுடியாத பலவித துயரங்களில் அகப்பட்டிருக்கும் அநேகர் இம்மாதத்திலே நிச்சயமாகவே ஆவியானவரினால் தேற்றப்பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நமது தேவனுக்கே மகிமை உண்டாவதாக. இன்று வாசித்த ஜெபமானது, தாவீதினுடையதோ யோபுவினுடையதோ அல்ல. ‘என் ஆத்துமா கலங்குகிறது” என்று தவிப்புடன் ஜெபித்தவர், நமது

ஜுலை 29, 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 27:1-14 ? கர்த்தருக்கே காத்திரு! நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.  சங்கீதம் 27:13 ‘கெட்டுப்போயிருப்பேன்” என்று கூறுவதால், தாவீதுக்கு ஏற்பட்ட சோதனை எத்தனை பலமாயிருந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம். நமக்கு வரும் சகல துன்பங்களும் நாம் கெட்டுப் போகுமளவிற்கு நம்மைத் தாக்கக்கூடும். ஆற்றமுடியாத துக்கங்கள். மரண பயங்கள், அருமையானவர்களை இழந்துவிட்ட அனுபவங்கள் இப்படியான வேளைகளிலேதான் நமது உள்ளம்

ஜுலை 28, 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  ஏசாயா 49:13-18 ?  கர்த்தர் சேர்த்துக்கொள்வார்! என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார். சங்கீதம் 27:10 கைவிடப்படுவது அல்லது தனிமைப்படுத்தப்படுவது மெய்யாகவே மிகவும் கொடிய அனுபவம். முன்னா; இந்த வசனத்தைப் படிக்கும்போது, பெற்றோர் தம் பிள்ளைகளை கைவிடமுடியுமா என்று நினைப்பதுண்டு. தாயன்பு மேலானது. ஏழையாயிருந்தாலும் எந்தவொரு தாயும் தன் பிள்ளைக்காக செய்யும் தியாகங்கள் சொல்லிமுடியாது. ஆனால் இன்று பெற்றோர்

ஜுலை 27, 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 27:7-9 ? கர்த்தருடைய முகம் என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. சங்கீதம் 27:8 ஆபத்தான சூழ்நிலைகளில் யாருடைய உதவியை நாடி ஓடுகிறோம்? யார் முகத்தை தேடுகிறோம்? இதற்குரிய பதிலிலேயே நமது விடுதலையும் தங்கியுள்ளது. தனது வாழ்க்கையிலே அநேக இடர்களைச் சந்தித்த தாவீது, ‘கர்த்தாவே, என் ஆபத்து நாளிலே உமது

ஜுலை 26, 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 10:16-23 சங்கீதம்  29:5-7 ?  கூடார மறைவு தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, …என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். சங்கீதம் 27:5 ‘என் கூடாரம் அழிந்துபோயிற்று: என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவார் இல்லை”(எரேமியா 10:20).  இன்றும் அநேகர் இப்படியாக தமக்குள் புலம்பித் தவிக்கிறார்கள் என்பதை நம்மால் உணரமுடியுமா? பாதுகாப்பு அற்றுப்போன நிலைமை இது.

ஜுலை 24, 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 122:1-9 ?♀️  கர்த்தருடைய ஆலயம் நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். சங்கீதம் 27:4 நமது வாழ்வுக்கு ஒரு குறிக்கோள் அல்லது இலக்கு அவசியம். அது இல்லாதவன்,  காற்றில் பறந்து மறைந்துவிடும் பதரைப்போலவே இருப்பான். இந்தக் குறிக்கோள்களும் பலவிதம். புகழடைய விரும்புவோர் சிலர். அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க விரும்புவோர் சிலர். பணம் சேர்க்க விரும்புவோர் சிலர்; சிறப்பாக

ஜுலை 23, 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 62:1-12 ?  மூன்று முனைகள் கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர். யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?  சங்கீதம் 27:1 சூரிய ஒளி, நீர், காற்று இம்மூன்றும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. இதை உணர்ந்துதான், தாவீதும், ஒரு மனிதனின் ஆவிக்குரிய ஜீவியத்திற்கு வெளிச்சம், இரட்சிப்பு, பாதுகாப்பு இம்மூன்றும் தேவையென்றும், அவை யாவும் ‘கர்த்தரே” என்றும் பாடுகிறார். வெளிச்சத்தையும்

ஜுலை 22, 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 4:1-8 ? நெருக்கத்தின் பின்னே விசாலம் …நெருக்கத்தில் இருந்து எனக்கு விசாலமுண்டாக்கினீர். சங்கீதம் 4:1 வீணானதை விரும்பி பொய்யை நாடுகின்ற மனுஷரினால் அவமானப்படுத்தப்பட்டும், அபிஷேகம்பண்ணப்பட்ட ராஜமேன்மையை அடைந்துவிடாதபடி ஒதுக்கப்பட்டவருமான தாவீதுதான் இந்தச் சங்கீதத்தைப் பாடியிருக்கிறார் என்றால், அவரது தூரநோக்கு மிக தெளிவாக விளங்குகிறதல்லவா. தாவீது விடுதலை மனதோடே இதனைப் பாடவில்லை. சவுல் ராஜா அவரின் பிராணனை வேட்டையாட துடித்தபோதும், சொந்த மகனுக்குப் பயந்து

Solverwp- WordPress Theme and Plugin