? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 15:8-10

வெள்ளிக்காசு உவமை

…காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? லூக்கா 15:9

தேவனுடைய செய்தி:

மனந்திரும்புகிற ஒரே பாவியைக் குறித்துத் தேவன் மகிழ்ச்சியடைகிறார். அதினாலே பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.

தியானம்:

பத்து வெள்ளிக் காசுகளில் ஒன்றைத் தொலைத்து விட்ட ஒரு பெண், ஒரு விளக்கை வைத்து, வீட்டைச் சுத்தம் செய்து, அந்தக் காசு கிடைக்கும் மட்டும் கவனமாகத் தேடுவாள். அதைக் கண்டெடுத்தபோது மற்றவர்களிடம் அதைக்கூறி சந்தோஷப்படுவாள். அதைப்போலவே ஒரு பாவி மனந்திருந்தி தன் வாழ்வை மாற்றினால் தேவ தூதருக்கு முன்பாக மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

மனந்திரும்புதல் மிக அவசியமானது.

 பிரயோகப்படுத்தல் :

சந்தோஷத்தை இரகசியமாக வைத்திருக்க முடியுமா? ஏன் எமது மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கின்றோம்?

கர்த்தர் எனக்குச் செய்த மகிழ்ச்சியான காரியங்கள் எவை? அதை நான் சாட்சியாக மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு சந்தோஷப்படுகின்றேனா?

“தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூடவரவழைத்து” இப்படி நான் கடைசியாக சந்தோஷப்பட்ட தருணம் எப்போது?

ஒரு பாவி மனந்திரும்புவதினால் வருகின்ற சந்தோஷத்தில், தேவதூதரும் பங்கெடுக்கிறார்களா? இல்லையா? அப்படியானால், நான் செய்யத்தகுந்த காரியம் என்ன? இன்று திருச்சபைக்கு வருகின்ற புதிய நபர்களை நான் எப்படி கண்ணோக்குகின்றேன்?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin