📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 9:12-21

போஜனங்கொடுங்கள்

அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். லூக்கா 9:13

தேவனுடைய செய்தி:

இயேசு கிறிஸ்துவானவர், யோவான்ஸ்நானகன் அல்ல, எலியாவுமல்ல, உயிர்த்தெழுந்த தீர்க்கதரிசிகளில் ஒருவருமல்ல, அவர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.

தியானம்:

ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர்கள் வனாந்திர பகுதியில் இயேசுவின் தேவ ராஜ்ய நற்செய்தியைக் கேட்டார்கள். அவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தி அமரச் செய்தபின்பு, இயேசு ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்களுக்கு பரிமாறும்படி சீஷர் களிடம் கூறினார். அனைவரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்? “நீர் தேவனுடைய கிறிஸ்து” என பேதுரு பதிலளித்தான்.

பிரயோகப்படுத்தல் :

இயேசு சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணியதுபோல நாமும் ஜெபிக்க ஆயத்தமா? ஜெபநேரத்தில் எம்மை சுயபரிசோதனை செய்கிறோமா?

என்னைக்குறித்து மக்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை நான் கொஞ்சமாவது அறிந்தவனாக இருக்கின்றேனா?

பசியுள்ளவர்களுக்கு போஜனம் கொடுக்க நான் ஆயத்தமா? எனது வருமானத்திலிருந்து ஏழைகளுக்கு என்ன உதவி செய்கின்றேன்?

💫 இன்றைய எனது சிந்தனைக்கு:

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (84)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *