? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 16:19-31

நித்திய வாழ்வும் இவ்வுலக வாழ்வும்

…இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். லூக்கா 16:25

தேவனுடைய செய்தி:

மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கும் தீர்க்கதரிசிகளின் எச்சரிப்புகளுக்கும் இயேசு தருகின்ற இரட்சிப்பின் நற்செய்திக்கும் ஒருவன் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், அவன் சொல்வதை யாரும் நம்பமாட்டார்கள், கீழ்ப்படிய மாட்டார்கள்.

தியானம்:

ஒருநாள் இவ்வுலகில் செல்வந்தனாக வாழ்ந்தவனும், லாசருவும் மரித்தார்கள். “ஆபிரகாமே! என்னிடம் இரக்கம் காட்டுங்கள். லாசருவின் விரலைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிர்விக்குமாறு லாசருவை என்னிடம் அனுப்புங்கள். இந்த நெருப்பில் நான் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்” என்று செல்வந்தன் சத்தமிட்டுக் கூறினான். ஒரு பெரிய பிளவு இருந்ததால் ஆபிரகாம் செல்வந்தனுக்கு உதவ முடியவில்லை. பூமியில் வாழும் சகோதருக்கும் எச்சரிப்புக் கொடுக்க முடியவில்லை.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவனிடத்தில் மனந்திரும்பு. இல்லாவிட்டால், நித்திய அழிவு உண்டு.

பிரயோகப்படுத்தல் :

19ம் வசனத்தின்படி, செல்வந்தர்கள் விலையுயர்ந்த ஆடைகளை எப்போதும் அணிவதும், ஒவ்வொரு நாளும் விருந்துண்டு களிப்பதும் தவறா?

செல்வந்தனின் வீட்டு வாசலருகே கொட்டப்படும் உணவுத் துணுக்குகளை உண்பவனாக, நாய்கள் வந்து புண்களை நக்கியதான நிலையிலிருந்த லாசருவின் இவ்வுலக வாழ்க்கை போல இன்றும் வாழ்பவர்களைக் கண்டது உண்டா? அவர்களுக்காக எதையாகிலும் செய்ததுண்டா?

“மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய்” என்று செல்வந்தனுக்கு கூறப்பட்டது. இன்று நாம் அனுபவிக் கும் நன்மைகளை பிறருடன் பகிர்ந்துகொண்டு தேவனுக்கு நன்றியுள்ள வர்களாக இருக்கிறேனா?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin