? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 10:1-20

சமாதானம் உண்டாவதாக

…உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் லூக்கா 10:20

தேவனுடைய செய்தி:

தேவன் அறுவடைக்கு எஜமானர். அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.

தியானம்:

 இயேசு சீஷரை நோக்கி: “உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான்” என்றார். நான் இயேசுவின் சீடனாக இயேசுவுக்குச் செவிகொடுப்பதும் அவரது அறுவடையில் பங்குபெறுவதும் அவசியம்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

சமாதானம் தருகின்ற ஆண்டவரைத் தன்னிடத்தில் பெற்றவனாகப் பிறரிடம் அவரை அறிமுகம் செய்து வைப்பவனே மெய்யான சீடன்.

 பிரயோகப்படுத்தல்:

அறுப்பு மிகுதியாக இருந்தாலும், வேலையாட்களோ கொஞ்சமாக இருப்ப தற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

தேவன் அறுவடைக்கு எஜமானர் என்றால், நாம் அந்த அறுவடையின் வேலையாட்களாகத் திகழ்வோமா?

“ஆண்டவரின் பெயரைக் கூறியபோது பிசாசுகள்கூட எங்களுக்குக் கீழ்ப் படிந்தன” என சீடர்கள் கூறி சந்தோஷப்பட்டதற்கு இயேசுவின் பதில் என்ன?

 “ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல” என்ற 3ம் வசனத்தில் யார் ஓநாய்? யார் ஆட்டுக்குட்டிகள்? என நினைக்கிறீர்கள்?

 “மனந்திரும்பியிருப்பார்கள்” என 13ம் வசனத்தில் இயேசு ஏன் கூறுகிறார்? தேவன் கடிந்துகொள்ளும் பட்டணங்கள் எவை? என்ன காரணம்?

? இன்றைய சிந்தனைக்கு:  


Solverwp- WordPress Theme and Plugin