? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 13:1-9

மனந்திரும்பாவிட்டால் அழிவு

…நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்… லூக்கா 13:5

தேவனுடைய செய்தி:

தேவன் நிச்சயமாகவே நியாயம் தீர்ப்பார். மனந்திரும்பினால் மீட்பு. மனந்திரும்பாவிட்டால் அழிவு நிச்சயம்.

 தியானம்:

மனந்திரும்பாத பாராயினும் இறுதியில் ஒரே முடிவை அடைவார்கள். அது நரகத்தில் தள்ளப்படுவதான அழிவாகவே இருக்கும்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

அத்திமரத்தில் கனியைத் தேடுகின்ற கர்த்தர் நம்மிடத்தில் கனியையே எதிர்பார்க்கின்றார்.

பிரயோகப்படுத்தல்:

இவ்வுலகில் விபத்துக்கள், பூகம்பங்கள், சுனாமிகள், தொற்றுநோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் மற்றவர்களை விடப் பெரிய பாவிகள் என்று கருதுவது சரியா? ஏன் அது தவறு?

மனந்திரும்பாவிட்டால் நாம் விசுவாசிகளாக இருப்பது சாத்தியமா?

“நீங்கள் மனஸ்தாபப்பட்டு மனம்மாறாவிட்டால் நீங்களும் அழிந்தே போவீர்கள்” என இயேசு கூறினார். நான் அழிந்துபோகாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? அதை வாழ்வில் நடப்பிக்கின்றேனா?

எல்லாவற்றிற்கும் சிறிதுகாலம் தவணை கொடுப்பது சரியானதா? தேவன் உடனடியாக நியாயத்தீர்ப்பு செய்யாமல் இருப்பது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

கனிதராத அத்திமரம் நிலத்தைக் கெடுத்ததுபோன்று கனிதராத கிறிஸ்தவர்களைக் கண்டதுண்டா? அவர்கள் எவற்றை கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்? நான் கனி தருபவனா? அல்லது கெடுப்பவனா? எனது

சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin