குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 28 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  28:1-6

?  தவறான தொடர்புகள்

…சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் …மறுஉத்தரவு அருளவில்லை. 1சாமுவேல் 28:6

? தியான பின்னணி:

சாமுவேல் மரித்துவிட்டார். பெலிஸ்தியர் இஸ்ரவேலின் மீது யுத்தத்திற்கு வருகின்றார்கள். பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்ட சவுல் பயந்து நடுங்குகிறான்; ஆண்டவாpடம் ஆலோசனைக் கேட்டும், கர்த்தர் கனவு மூலமோ, ஊரீம் மூலமோ சவுலுக்கு பதிலளிக்கவில்லை.

? பிரயோகப்படுத்தல் :

❓ ‘உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்து கொள்வீர்” என தாவீது ஆகீஸ் ராஜாவிடம் கூறுகிறான். உண்மையை மறைக்கும் ஒரு நட்பின் முடிவு என்னவாக அமையும்?

❓ சூழ்நிலையின் நிமித்தம், சூழ்நிலை அழுத்தத்தினால் உண்மையை சொல்லாமல்விட்ட சந்தர்ப்பங்களை நினைத்து வருந்துகிறீர்களா?

❓ ஏன் கர்த்தர் சவுலுக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை? உங்கள் வாழ்க்கையில், கடந்தகாலங்களில் தேவ சத்தத்திற்கு கீழ்ப்படியாமல் இருந்ததுண்டா? தேவனது மெல்லிய குரலை கேட்க முடியாமல்போன சந்தர்ப்பங்கள் உண்டா?

❓ வசனம் 3ன்படி, வெளியரங்கமான நல்ல காரியங்களை செய்வதினால், தேவனுக்கு உகந்தவர்களாக மாறிவிட முடியுமா?

? தேவனுடைய செய்தி:

▪️ தேவனுடைய சித்தத்தையும் திட்டத்தையும் தேடுகிற எல்லோரும் தேவனுக்கு உகந்தவர்கள் அல்ல. அவர் வெளிப்படுத்திய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழுவதே மிக முக்கியமானது.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

சத்தியத்தை அடக்கிவைப்பது எமக்குள் பலத்தைவிட, பெலவீனத்தையே உருவாக்கும்.    

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whatsapp: +94768336006

Solverwp- WordPress Theme and Plugin