? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:1-3

குடிமதிப்பு  எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே,

…ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார். மீகா 5:2

தேவனுடைய செய்தி:

எந்த அதிகாரங்களுக்கும், அரசாங்கங்களுக்கும் மேலாக தேவனது அரசாட்சியும் ராஜரீகமும் ஆட்சி செய்கிறது.

தியானம்:

வரி வசூலிப்பதும், தமது இராணுவத்தை பலப்படுத்தும் நோக்கத்துடன் ரோம அரசு குடிமதிப்பு எடுத்தவேளையில், மக்கள் தமது தகப்பனாரின் சொந்த ஊர்களுக்குச் சென்று பதிவுசெய்வது கட்டாயமாயிருந்தது.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

வித்தியாசமான நபர்களையும் அதிகாரங்களையும் பாவித்து, தேவனது திட்டத்தை நாம் அறியாவிட்டாலும், தேவன் சரித்திரத்தில் தனது திட்டத்தை சித்தத்தை நிலைநாட்டுகிறார்.

பிரயோகப்படுத்தல் :

  • மீகா 5:2 ஐ வாசிக்கவும். ரோம அதிபதி தனது காலத்தில் செயல்பட்டாலும், அதன் முடிவு என்ன? அநேக வருடங்களுக்கு முன்பு, தீர்க்கதரிசனமாக கூறியது நிறைவேறியது. தேவனது உண்மைத்தன்மை, வாக்குத்தத்ததைக் குறித்து உங்கள் எண்ணம் என்ன?
  • இன்று நீங்கள் சில நபர்களின் அதிகார துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவன், பாதிக்கப்பட்டவள் என நினைக்கிறீர்களா? அதற்கூடாக தேவன் செய்த நன்மை என்ன? அவர் கற்றுத் தந்த பாடங்கள் யாவை?
  • இப்பகுதியில், ‘நபர்களின் பெயர் எழுதப்பட்டிருப்பதிலிருந்து” லூக்கா நமக்கு கூறும் செய்தி என்ன? சரித்திரத்தில் நடந்த சம்பவம், கிறிஸ்து பிறப்பின் காலம், இடம் தெளிவாக கூறப்பட்டுள்ளதா?
  • சத்தியத்திற்குக் கீழ்ப்படிபவர்கள் சரித்திரத்தை நகர்த்துகின்ற, சரித்திரத்தில் செயலாற்றுகின்ற சிருஷ்டிகரை நெருங்கி வருவார்கள். நீங்கள் அவர் சத்தத்திற்குச் செவிசாய்க்கிறீர்களா?

? எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Comments (2)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *