? சத்தியவசனம் – இலங்கை. ??
? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: கலாத்தியர் 4:21-31
அடிமையும், சுயாதீனனும்
அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ள வளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். கலாத்தியர் 4:23
உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்திருந்த போதும், இன்னும் பிள்ளை இல்லாததால தனது மனைவி சாராயின் பேச்சைக் கேட்ட ஆபிராம், அடிமைப் பெண்ணாகிய ஆகாரை மனைவியாக்கினான். இதனால் இஸ்மவேல் என்னும் குமாரனை அவள் பெற்றெடுத்தாள். ஆனால், குறித்த காலத்தில், ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் தேவனின் வாக்குத்தத்தத்தின்படியே ஒரு குமாரனை பெற்றெடுத்தாள். அவள் பெயர் ஈசாக்கு. இவர்கள் இருவரின் உதாரணத்தையே பாவித்து, நியாயப் பிரமாணத்தையும், இயேசுவின் மீட்பையும் பவுல் கலாத்தியருக்கு விளக்கினார். அடிமைக்குப் பிறந்த மகன் இஸ்மவேலை நியாயப்பிரமாணத்துக்கு உதாரணமாகவும், சுதந்தர குமாரனான ஈசாக்கை இயேசுவினாலான மீட்பின் உதாரணமாகவும் பவுல் விளங்க வைக்கிறார்.
யூதப்போதனைகளுக்கு அடிமைப்பட்டிருந்த கலாத்தியரை, மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர பவுல் பிரயாசப்படுகிறார். நியாயப் பிரமாணத்துக்கு முக்கியத்துவம் கொடுக் கின்ற அவர்களுக்கு, நியாயப் பிரமாணத்து காலத்தின் சம்பவங்களாலேயே சத்தியத்தை விளங்கப்படுத்த முனைகிறார். நியாயப்பிரமாணத்துக்கு நாம் இனி அடிமைகளல்ல; இயேசுவின் பிள்ளைகள் என்ற சுயாதீனத்தைத் தேவன் நமக்குத் தந்தருளியுள்ளார். இப்போது நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாயிருக்கிறோம்.
சரியான சத்தியத்தில் நிலைத்திருக்கும்படிக்கு மீண்டும் மீண்டும் கலாத்தியரை பவுல் எச்சரிப்பதைக் காண்கிறோம். இன்றும் எம்மைச் சத்தியத்தைவிட்டு விலக்கவும், எமது விசுவாசத்தைக் குலைக்கவும் தக்கதான எத்தனையோ உபதேசங்களும், ஊழியங் களும் நாளுக்கு நாள் எழும்பிக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் தேவனுடைய வார்த்தை என்னும் அஸ்திபாரத்தில் கட்டப்பட்டவர்களாய் என்றும் அதில் நிலைத்திருக்க, அனுதினமும் அவருடைய வார்த்தையைத் தியானித்து அதில் உறுதிப்படுவோம். எந்தப் போதனை யானாலும் சரி, ஆலோசனையானாலும் சரி, அது தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றதாக அமைந்துள்ளதோ என்பதையே முதலாவது நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இன்று பிசாசானவன் தந்திரமாக சத்தியத்தைவிட்டு தேவனுடைய பிள்ளைகளை விலக்க, பலவிதமான மாயையான உபதேசங்க ளையும், நவீனமான உபதேசங்களையும் கொண்டுவந்து பலரது மனதைக் கலங்கப்பண்ணி பலவீனப்படுத்துகிறான்.
நாம் ஜாக்கிரதையாய் நம்மைக் கிறிஸ்து அருளிய சுதந்தரத்துக்குள் காத்துக்கொள்வோமாக. சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
சிந்தனைக்கு:
தேவனுடைய வார்த்தைக்கு என் வாழ்வில் நான் கொடுத்திருக்கிற முக்கியத்துவம் என்ன? சத்தியம் எனக்குள் இருக்கிறதா? அல்லது மனித போதனைகளால் அலசடிப்படுகிறேனா?

?♂️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk | www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
? அனுதினமும் தேவனுடன்.
Good Day Guys,
Only if you really think about pre k online learning?!
We have more detailed information about online classes kindergarten
Please visit our internet portal about live online classes for kids or please click http://www.whateating.woobi.co.kr/xe/?document_srl=782922 for Sign up for a
free consultation now!
Our site have tag’s: Pre k online classes, kiddio website, preschool classes online
And some other and guaranteed information.
Thanks for your attention.
Have a good day.
Thanks
Hello Guys,
Only if you really think about painting rendering?!
We have more detailed information about hills district cabinetry
Please visit our internet portal about hill painting or
please click https://thesence.biz/?document_srl=5022625 for Sign up for a free consultation now!
Our site have tag’s: House painting services near me, house painters north shore, house painting
surrey hills
And some other and guaranteed information.
Thanks for your attention.
Have a good day.
Thanks
This is my first time visit at here and i am genuinely pleassant to read everthing at one
place.
Wm-Puppe
Hey there, You’ve done a great job. I’ll definitely digg it and personally recommend to my friends. I’m confident they will be benefited from this website. Sex Doll Blog