📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாக் 1:9-11, 1தீமோ. 6:6-10
நிலையற்ற மகிழ்ச்சி
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரி யத்தின்மேல் நம்பிக்கை வையாமலும்… 1தீமோ.6:17
இந்நாட்களிலே, நம்மை அதிகமாகவே இடறலடையச்செய்கின்ற ஒரு முக்கிய விடயத் தைக்குறித்து நாம் சிந்திக்கத் தவறகூடாது. அதுதான் “பணம்” அல்லது “ஐசுவரியம்”. காசு இல்லையானால் நம்மால் அசையக்கூட முடியாத ஒரு காலகட்டத்தில் வாழுகி றோம். இன்னும் சிந்தித்தால் இன்று பணமே மனிதனை ஆளுகைசெய்கிறது என்றா லும் அது மிகையாகாது.
தேவன் படைக்காத ஒன்று இந்தப் பணம். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்து வதற்காக மனிதன் ஏற்படுத்திய ஒரு வழிமுறைதான ; இந்தப் பணம். வங்கிமுறைகள் காசுக்கட்டளை, காசோலை, டிஜிட்டல் கரன்சி யாவும் தோன்றிய சரித்திரம் உண்டு. இந்தக் காசு காலப்போக்கில் மனிதனை ஆட்கொண்டுவிட்டது. ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி, பணக்காரன ; ஏழை என்ற பாகுபாட்டை ஏற்படுத்திவிட்டது. தனிநபர், நாடு எல்லாமே கடனுக்குள் மூழ்கும்படி ஆகிவிட்டது. பணம் குடும்பங்களைச் சிதைத்து, பிள்ளைகளைச் சீரழிக்கிறது; ஆசை இச்சைகளுக்கு மனிதனை இழுத்துக்கொன்று போடுகிறது. சபைகளுக்குள்ளும் பணம் புகுந்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை ஏற்படுத்தத்தான் செய்கிறது. உலக வாழ்வுக்கென்று உள்ள இந்தப் பணம் நமது ஆவிக்குரிய வாழ்வைக்கூட தாக்கிவிடுகிறது. என்றாலும் காசு இல்லாமல் உலகில் வாழவும் முடியாது.
இயேசுவின் வழி, பணம் அல்ல. இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட ஒரே விடயமே சபையின் அலங்காரம். உலகத்தில் பணத்தினால் தாழ்த்தப்பட்டவன் என்று கருதப்படுகிறவன் கிறிஸ்துவுக்குள் மீட்கப்படும்போது அவன் உயர்ந்தவனே! “தாழ்மையுள்ளவர் களை உயர்த்தினார்” என்று மரியாள் பாடியதை நினைவுபடுத்துவோம். தாழ்த்தப்படுகிறவன் கிறிஸ்துவுக்கு முன்பாக ஐசுவரியம் ஒன்றுமில்லை என்றுணர்ந்து, தான் உயர்த்தப்படும்போது அந்த தெய்வீகக் கொடைக்காக நன்றி செலுத்தவேண்டும். ஐசுவரியத்தில் உழலுகிறவன் கர்த்தருக்கு முன்பாகப் பணம் ஒன்றுமில்லை, அது வரும் போகும் என்றுணர்ந்து தாழ்த்தப்படும்போது மகிழ்வானாக. அப்படியானால் பணம் சம்பாதிப்பது தவறா? இல்லையே! பணம் தேவை. ஆனால் பணஆசைப்பட்டு, அதை தெய்வமாக்கி அலையும்போதுதான் ஆபத்து நேரிடுகிறது. “கர்த்தர், உங்கள் கட்டுப்பாடான குடும்ப தேவைகளுக்கும் மிஞ்சி கொடுக்கிறாரென்றால், அதைச் சேமித்து மேலும் சௌகரியங்களைச் சம்பாதிக்க அல்ல; மாறாக, தேவையிலுள்ளவர்களுக்கு உதவவே கர்த்தர் உங்களை நம்பி அதிக வருமானத்தைத் தருகிறார்.” வறுமை பசிபட்டினி வாட்டும்போது பணத்தின்மீது சிலருக்கு வெறுப்பு வருகிறது, சிலருக்கு சாம்பாதிக்கவேண்டும் என்ற வெறி வருகிறது. நிலையற்ற ஐசுவரியத்தின்மீது ஆசை வைக்காமல், ஐசுவரிய சம்பன்ன ராகிய கர்த்தரை நாம் தேடும்போது, நமது தேவைகளை அவர் சந்திக்கமாட்டாரா?
💫 இன்றைய சிந்தனைக்கு:
“தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்”
📘 அனுதினமும் தேவனுடன்.