? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 3:7-14

 கோடரி

நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்… லூக்கா 3:14

தேவனுடைய செய்தி:

இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்.

தியானம்:

யோவானின் பிரசங்கம் அநேகரைக் கவர்ந்தது. அது, ‘நான் என்ன செய்ய வேண்டும்” என்ற ஆவலை ஏற்படுத்தியது.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்

பிரயோகப்படுத்தல் :

யோவானின் பிரசங்கத்திலிருந்து அவரைக்குறித்து, எப்படிப்பட்டவர் என நினைக்கிறீர்கள்? இன்றைய சபை பிரசங்கங்களுக்கும் யோவானின் (பாவம், மனந்திரும்புதல்) பிரசங்கத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

அண்மையில், யாராவது நமது பாவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்களா? நாம் எவ்வாறு அதற்கு முகங்கொடுத்தோம்? நாம் யாருக்காவது பாவத்திலிருந்து மனந்திரும்புங்கள் என அழைப்பு விடுத்தோமா?

மனந்திரும்புதல் வெறும் ஆவிக்குரிய விடயமா? இன்று நாம் செய்யும் தொழில், செயல்களில் நேர்மை, உண்மை, உத்தமமாக இருக்கிறோமா?

வசனம் 9ல், கோடாரி, வெட்டுண்டு, அக்கினி என்ற சொல்லின் முக்கிய செய்தி எது? அன்பா? நியாயத்தீர்ப்பா? அண்மையில் நியாயத்தீர்ப்பின் செய்திகளைக் கேட்டதுண்டா? அது வேதாகமத்திற்கு ஏற்புடையதா?

நான் பாவி என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, இரட்சகராகிய கிறிஸ்து என் பாவத்திற்காக மரித்தார் என ஏற்றுக்கொண்டு, எனது வாழ்வின் எல்லா பகுதிகளையும் பரிசுத்த வாழ்வுக்கு அர்ப்பணிப்பேனா?

? இன்றைய எனது சிந்தனை:

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin