? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 16:14-18

மாறாத தேவ வாக்கியங்கள்

…தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார். மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.லூக்கா 16:15

தேவனுடைய செய்தி:

 “தேவனுடைய இராஜ்யத்தில் செல்வதற்குப் பலர் மிகவும் முயன்று வருகிறார்கள். உண்மையில், இயேசு இன்றி வேறு வழியேதுமில்லை”

தியானம்:

“மக்களின் முன்பாக நீங்கள் நல்லவர்களாக நடந்துகொள்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே என்ன இருக்கிறதென தேவன் அறிவார். மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்கள் தேவனின் வெறுப்புக்கு உரியவை ஆகின்றன” என பரிசேயர்களிடம் இயேசு கூறினார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது.

பிரயோகப்படுத்தல் :

அன்று, “பணத்தை நேசித்த பரிசேயர்கள் இயேசுவின் உபதேசத்தை விமர்சித்தார்கள்” இன்றும் அப்படிப்பட்டவர்கள் உண்டா?

பிற மனுஷர் முன்பாகத் தங்களை நீதிமான்களாகக் காட்டுகிறவர்களைக் கண்டதுண்டா? அவர்களைக்குறித்து என்ன வேதாகமம் என்ன சொல்கிறது?

 ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகன் காலம் தொடங்கி, தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. அதை கேட்டு விசுவாசிப்பவர்கள் யாரை ஏற்றுக்கொள்ளவேண்டும்?

 வசனம் 17ன்படி, “வேதவாக்கியங்களில் காணப்படுகிற ஒரு எழுத்தின் ஒரு சிறிய பகுதியைக்கூட மாற்ற முடியாது. அதைக் காட்டிலும் வானமும் பூமியும் அழிந்துபோவதே எளிதாக இருக்கும்” என்ற சத்தியத்தைக் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன?

“தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணு கிறவனும் விபசாரஞ்செய்கிறான்” என்ற வார்த்தை இன்றைய சமுதாயத்திற்கு எவ்வளவு பொருத்தமானது?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin