? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 12:35-48

ஆயத்தமாயிருங்கள்!

…நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்… லூக்கா 12:40

தேவனுடைய செய்தி:

தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள். (வசனம் 53)

தியானம்:

மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்கின்ற நாம், இந்தக் காலத்தையும் நிதானித்தறிய வேண்டும்.

பிரயோகப்படுத்தல்:

நாளுக்கு நாள் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் மத்தியில், நாம் விழித்திருப்பது எப்படி? யாருக்காக நாம் விழித்திருக்க வேண்டும்?

எஜமான் எப்பொழுதெல்லாம் வந்து, தனது ஊழியக்காரரை கவனிக்கிறார், அவர் வரும்போது யாரை அதிகாரியாக வைப்பார்?

எஜமான் வர நாள் செல்லும் என்று சிந்தித்து செயற்படுகின்ற வேலைக்காரன் எப்படிப்பட்டவன்? அவனுக்குரிய தண்டனை என்ன?

உங்களுடைய வாழ்க்கையைக் காண்கின்ற மற்றவர்கள் தேவனைப் புகழும்படி, உங்களது நேரம், திறமை, பொருட்களால் ஆத்தும ஆதாயம் செய்கின்றீர்களா? வசனம் 58, 59ன்படி நாம் தவறு செய்திருந்தால் முடிந்தவரை ஈடுசெய்யவும் யாவரோடும் சமாதானமாயிருக்கவும் நாடுகின்றோமா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin