? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:17-19

இயேசுவின் நாமத்தில் சுகமுண்டு.

தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், …வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள்.லூக்கா 6:17

தேவனுடைய செய்தி:

இயேசு தமது வல்லமையினால் அநேகரை குணமாக்கினார்.

தியானம்:

இயேசுவானவர் தமது சீஷர்களுக்கு உபதேசித்தார். அநேகர் தேவ வசனத்தைக் கேட்டார்கள். அத்துடன் மக்களிடமிருந்த வியாதிகளிலிருந்து அவர்களை இயேசு குணமாக்கினார். அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்ட வர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

…இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1யோவான் 1:7)

பிரயோகப்படுத்தல் :

வசனம் 17ன்படி, இயேசுவின் சீஷர்கள் எத்தனைபேர்? எங்கிருந்து மக்கள்

வசனத்தைக் கேட்கும்படி வந்திருந்தார்கள்?

இயேசுவிடமிருந்த வல்லமை யாரைக் குணமாக்கியது? அந்த குணமாக்கு தலை நான் பெற என்ன செய்யவேண்டும்?

எல்லா மக்களும் இயேசுவைத் தொடும்படியாக முயன்றது ஏன்?

இன்று என் பாவங்களிலிருந்து விடுதலையடைய நான் விரும்புகின்றேனா? எந்த விடயத்தில் எனக்கு ஆரோக்கியம் தேவையாயுள்ளது? அந்த விடயத்தை தேவனிடம் ஒப்புவிப்பேனா?

இயேசுவின் வசனத்தைக் கேட்டு, அதன்படி நடக்க நான் என்ன முயற்சி எடுக்கின்றேன்? வசனத்தின்படி என்ன செய்கிறேன்?

? இன்றைய சிந்தனைக்கு:

? அனுதினமும் தேவனுடன்.

Comments (64)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *