? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 16:1-4

தேவனுக்கு முன்னாக ஓடுதல்

சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆதியாகமம் 16:2

பிலிப்ஸ் புரூக்ஸ் என்ற மாபெரும் தேவஊழியரைச் சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றபோது, அவர் கூட்டில் அடைபட்ட சிங்கம்போல கோபவெறியுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். நான் அவரிடம் காரணம் கேட்க, ‘நான் ஒரு அவசர நிலையில் இருக்கிறேன். ஆனால் தேவன் என்னுடைய அவசரத்திற்கேற்ப செயற்படவில்லை” என்றார். இதே உணர்வு ஆபிராமிடமும் இருந்திருக்கும். ஆபிரகாமுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று தேவன் வாக்குப்பண்ணியிருந்தார். ஆனால் ஆபிராமுக்கு 86 வயதும், சாராளுக்கு 76 வயதும் ஆனபின்பும் வாக்கு நிறைவேறவில்லை. மற்றவர்களும் இவர்களுக்குப் பிள்ளை பிறக்கும் காலம் கடந்துவிட்டது என்று கூறியிருப்பார்கள்.

உண்மையில் ஆபிராமுக்கு உதவி தேவைப்பட்டது. பண்டைக் காலத்தில் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் மலடியாயிருக்கும் ஒருத்திக்காக அவளுடைய அடிமைப்பெண் குழந்தை பெற்றுக்கொடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிருந்தது. எனவே சாராள், தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை ஆபிரகாமுக்குக் கொடுத்து, தங்களுக்கு ஒருசந்ததி பிறக்க வகைசெய்தாள். ஆபிராம் தனக்கிருந்த வேகத்தில் தேவனுக்கு முன்னாக ஓடி, ஆகாருடன் சேர்ந்து இஸ்மவேல் என்ற மகனைப் பெற்றெடுத்தான். மத்திய கிழக்கு நாட்டில் இன்றும் இப் பழக்கம் உண்டு. பின்னர் ஆபிராமுக்கு, வாக்குப் பண்ணப்பட்ட ஈசாக்குப் பிறந்தான். இன்றுகூட இவர்கள் இருவரினதும் சந்ததியினர் ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாகவே இருந்து வருகின்றனர்.

தேவனுக்கு ஒரு தெய்வீக சித்தம் மாத்திரமல்ல, எது எப்போது நடக்கவேண்டும் என்ற மாறாத நித்திய கால அட்டவணையும் உண்டு. ‘காலம் நிறைவேறினபோது தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” (கலா.4:4) என்று பவுல் இக்காலத்தை குறித்து நினைவுபடுத்துகிறார். இதுபோலவே நம்முடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு  காரியத்திற்கும் ஒரு காலத்தைத் தேவன் வைத்திருக்கிறார். இந்தத் தேவதிட்டத்திற்கு நாம் பின்நிற்கவும் தேவையில்லை;

ஆபிராமைப்போல முன்னால் ஓடுவதும் மிகவும் ஆபத்தானது. அவசரப்படும்போது அதிக நேரங்களில் தவறு நேரிடவே செய்யும். அநேக விபத்துக்கள்கூட அவசரப்படுவதினாலேயே ஏற்படுகின்றன. நமது வாழ்வில் தேவ ஆசீர்வாதத்தைக் கேட்கும்போது, தேவனுடைய கால அட்டவணையையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய பொறுமையின்மை தேவனுடைய காலத்திட்டத்துக்கு முன்னால் ஓடிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

? இன்றைய சிந்தனைக்கு:

சரியான செயலை தவறான நேரத்தில் செய்யும்போது, நாம் செய்யும் சரியான செயல், தவறான செயலாகிவிடுகிறது. சிந்திப்போம்.

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Comments (30)

  1. Qorrqq

    Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *