? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : லூக்கா 4:1-13

சோதனைகள்

மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் லூக்கா 4:4

தேவனுடைய செய்தி:

உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.

தியானம்:

இயேசுவானவர் சோதிக்கப்பட்டார். அந்தச் சோதனைகளுக்கு அவர் எவ்வாறு முகங்கொடுக்கிறார் என்பதை இப்பகுதியிலே நாம் காணலாம்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

ஆவியானவரால் நிறைந்திருப்பின், எமக்கு பாவச் சோதனைகள் வராது என்று தப்பபிப்ராயம் கொள்வது பயங்கரமானது.

பிரயோகப்படுத்தல்:

வசனம் 1ன்படி, “ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட் டார்” என்பதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?

இயேசுவுக்கு ஏற்பட்ட மூன்று சோதனைகள் எவை?

சாத்தான் இயேசுவை சோதிக்க எவற்றைப் பாவித்தான்?

இதிலிருந்துநான் கற்றுக்கொள்வது என்ன?

 இன்று தேவ வசனத்தைப் பிழையாக பாவிப்பவர்களைக் குறித்து உமது கண்ணோட்டம் என்ன?

சாத்தானின் சோதனைகளை எவ்வாறு இயேசு முகங்கொடுத்தார்?

இன்று உங்களுக்கு முன்பாகவுள்ள பாரிய சோதனை என்ன?

எப்படி அவற்றிற்கு முகங்கொடுக்கப் போகின்றீர்கள்?

முகங்கொடுக்கின்றீர்கள்?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்

Comments (205)

  1. Qbffay

    Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *