📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 10:38-42

நல்ல பங்கைத் தெரிந்துகொள்

…அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். லூக்கா 10:39

தேவனுடைய செய்தி:

மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள். தேவ பிள்ளையாகிய உன்னாலும் அதைத் தெரிந்தெடுத்திட முடியும்.

தியானம்:

ஒரே ஒரு காரியம் முக்கியமானது. அது தேவ வசனத்தைக் கேட்பதே.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கர்த்தருடைய வசனமே நாம் தெரிந்தெடுக்க வேண்டிய நல்ல பங்கு.

பிரயோகப்படுத்தல்:

நீங்கள் வீட்டிலே பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தம் அடைந்ததுண்டா? அச்சமயங்களில் உங்களுக்கு யார் உதவி செய்தார்கள்? அவ்வாறே நீங்கள் பிறருக்கு உதவி செய்ததுண்டா?

அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்படுவதும் எல்லா வேலை களையும்தானே செய்வதும் எரிச்சலடைவதும் நியாயமா? இயேசு மார்த்தாளிடம் உணர்த்த விரும்பிய விடயம் என்ன?

மரியாள், மிகச்சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது எப்படி? நான் அந்த மிகச் சிறந்த ஒன்றைக் கண்டறிய என்ன செய்யவேண்டும்?

மரியாள் கர்த்தரின் பாதத்தினருகே உட்கார்ந்து, அவர் சொன்னதையெல் லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். இன்று பிரசங்க நேரத்தை நான் தவற விடுகின்றேனா? கர்த்தருடைய வசனத்தைக் கேட்க வேண்டுமென்று கவலைப்பட்டதுண்டா? பிரயாசப்பட்டதுண்டா? முயற்சியெடுத்ததுண்டா?

சத்தியத்தை அறியாத கிறிஸ்தவனாக இருப்பவர்களைக் கண்டதுண்டா? அவர்கள் எதற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்?

💫 இன்றைய சிந்தனைக்கு:  

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *