? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:21-26 

நியாயப்பிரமாணத்தின்படியே… 

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங் களையானாலும் …நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். மத்தேயு 5:17

?    தேவனுடைய செய்தி:

கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார். கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்த நான் செய்தது என்ன?

தியானம்:

இரட்சகர் பிறந்தார். ஆதியாகமம் 17ல், விருத்தசேதனம் ஆபிரகாமுடனான  உடன்படிக்கை. முன்பு அறிவிக்கப்பட்டபடி இயேசு என பெயரிடப்பட்டது. லேவி 12 ன்படி 40 நாட்களுக்குப் பின்பு சுத்திகரிப்பு நிறைவேற்றப்பட்டது. யாத்திராகமம் 13 ன்படி முதல் ஆண்பிள்ளை கர்த்தருடைய சமுகத்தில் கர்த்தருக்காக ஒப்புவிக்கப்படுகின்றது.

?  விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

அர்த்தமும் தேவ வார்த்தையின் பிரகாரமுமான சம்பிரதாயங்கள் குடும்பத்தையும் சபையையும் வளர்க்கும். அர்த்தமற்ற வார்த்தையின் அஸ்திபார மில்லாத சம்பிரதாயங்கள் சரிவைக் கொண்டுவரும்.

?   பிரயோகப்படுத்தல் :

  • நியாயப்பிரமாணம் குறித்த உங்கள் கண்ணோக்கு யாது? இது யாருக்கு?  நியாயப்பிரமாணம் என்றால் என்ன?
  • சிருஷ்டிகர் எம்மோடு இருக்கிறார், ஆக எந்த நியாயப் பிரமாணத்தின்படியும் வாழ அவசியமில்லை என ஏன் அவர்கள் நினைக்கவில்லை?
  • கிறிஸ்தவ சமூகத்திற்கு நீதிச் சட்டங்கள், (10 கற்பனைகள்) அவசியமா?
  • குடும்பத்தில் நீங்கள் தவறிய, நிலைதடுமாறுகிற வேதாகம விழுமியங்கள், ஒழுக்கக் கட்டுபாடுகள் எவை?
  • சபையின் முறைமைகள், சம்பிரதாயங்கள் அர்த்தமற்றதாக இருக்கும்போது அது இக்கட்டாக மாறுவதைக் கண்டுள்ளீர்களா?
  • பிதாவானவர் யாவற்றையும் பார்த்துக்கொள்வார் என இருந்துவிடாது,
  • யோசேப்பும் மரியாளும் அறிந்திருந்த சத்தியத்தின்படி வாழ்ந்தார்களா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Comments (160)

  1. Reply

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *