📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 40:9-23

தேவனுடைய பார்வை

ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான். ஆதியாகமம் 40:23

நமக்குள் எழும் பல கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில்லை. இதனால் குழம்பிப் போகிறோம். ஆனால், நமக்குமுன் வாழ்ந்தவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களினூ டாக உரிய பதில்களைக் கற்றுக்கொள்ளலாம். அவர்களுக்கு அன்று எழுந்திருக்கக் கூடிய பல புரியாத கேள்விகளுக்குரிய பதில்களை, அவர்களது வாழ்விலே பின்னர் என்ன நடந்தது என்பதற்கூடாக, இன்று நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. அப்படியா னால் நமது வாழ்வின் சம்பவங்களிலும் தேவநோக்கம் ஒன்று உண்டு என்பதில் சந்தேக மில்லையே! நமது கேள்விகளுக்கும் வேதாகமத்திலே தேவன் பதில் வைத்திருக்கி றார். நாம் திகைத்துக் கலங்கவேண்டியதில்லை.

வாழ்வை அனுபவிக்கவேண்டிய வாலிப வயதிலே அத்தனை துயரங்களையும் அனுப விக்க யோசேப்பு செய்த குற்றம் என்ன? அப்பாவின் செல்லப் பிள்ளை, கீழ்ப்படிவுள்ள பிள்ளை; அண்ணன்மார் செய்த குற்றங்களை அப்பாவுக்குச் சொன்னாலும், அவர்களை நேசித்தவன், இல்லையானால் உணவைக் கொண்டு சகோதரர்களைத் தேடி அலைந் திருப்பானா? எனினும், குழிக்குள் விழும் தண்டனைதான் அவனுக்குக் கிடைத்தது. வீட்டைவிட்டு எங்கும் போகாத அவனை அந்நிய தேசத்து வியாபாரிகளுக்கு விற்றுப் போட்டார்கள். புதிய இடம், புது மனிதர், புதிய பாஷை; ஆனாலும், அவன் தன் நேர்மையிலிருந்து, தேவனிடம் கொண்டிருந்த பற்றுதலிலிருந்து விலகவில்லை. கிடைத்த பரிசோ, அநியாயக் குற்றச்சாட்டும் சிறைவாசமும்தான். பானபாத்திரக்காரன் மூலம் விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்ததில் மேலும் இரண்டு ஆண்டுகளும் ஓடிவிட்டது. இக்காரியங்களை மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த உலகில் அன்புகாட்ட, நியாயம் செய்ய, நன்றிசொல்ல யாருமேயில்லை என்றுதான் சொல்லு வோம். ஆனால், யோசேப்பின் வாழ்வில் பின்பு நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, நடந்து முடிந்திருந்த அத்தனை காரியங்களையும் தேவன் வேறுவிதமாகப் பார்த்தார் என்பது புரியும். எல்லாவற ;றிலும் தேவன் யோசேப்பை ஆசீர்வதித்தார்; எப்படியெனில் தேவன் அவரோடே இருந்தார். எல்லா சோதனைகளுக்கூடாகவும் யோசேப்பைக் கர்த்தர் புடமிட்டார்; மாத்திரமல்ல, பின்னால் யோசேப்புக்கூடாகச் செய்யும்படி தேவன் கொண்டிருந்த நோக்கத்திற்கு நேராகவே யோசேப்பை வழிநடத்தி, தகுதிப்படுத்தினார்.

தேவபிள்ளையே! எவ்வித துக்க சூழ்நிலையிலும் கலக்கமடையாதே. முன்னே வாழ்ந்த வர்களின் வாழ்வைச் சிந்திக்கும்போது, நம்மைக்குறித்தும் தேவன் பெரிய நோக்கம் வைத்திருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்கலாம். கர்த்தர் நம்மைக் கைவிடமாட்டார்; நம்முடைய வாழ்விலும் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்; ஆனால் நாம் அவரோடே இருக்கவேண்டுமே.

💫 இன்றைய சிந்தனைக்கு:

“என்னைக்கொண்டுமா” என்று நம்மைக் கேட்டுப்பார்ப்போம். ஆம். நாம் கர்த்தருடைய பிள்ளைகள் என்பது மெய்யென்றால், நம்மைக் கொண்டும் அவர் பெரிய காரியம் செய்வார்.

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *