? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 9:37-50

தேவனுடைய மகத்துவங்கள்

அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங் குறித்து அனைவரும் ஆச்சரியப்பட்டு… லூக்கா 9:43

தேவனுடைய செய்தி:

இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், …உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான்.

தியானம்:

“ஒரு ஆவி என் மகனை அடிக்கடி ஆட்கொள்ளுகிறது, திடீரென்று கத்துகி றான். அவன் நுரைதள்ளுகிறான். அது அவனை விட்டுப்போகுதில்லை, சீடர்களிடமும் மன்றாடினேன். அவர்களால் துரத்த முடியவில்லை” என்று ஜனக்கூட்டத்திலிருந்து ஒருவன் கத்தினான். இயேசுவோ, அசுத்தஆவியைக் கடிந்து, சிறுவனைக் குணமாக்கி, அவனது தந்தையிடம் ஒப்படைத்தார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

“என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான்” – இயேசு.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 44ல், “நான் சொல்லுவதை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்:

மனுமகன் மனிதரிடம் கையளிக்கப்படப் போகிறார்” என சீடர்களிடம் இயேசு கூறியதன் நோக்கம் என்ன? ஏன் அவர்களால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை?

வசனம் 46ன்படி, சீடர்களுக்குள், யார் பெரியவன் என்ற விவாதம் எழுந்தது போல இன்று திருச்சபையிலுள்ளவர்கள் மத்தியில் போட்டிமனப்பான்மையை கண்டதுண்டா?

“சிறியவன் எவனோ, அவனே பெரியவன்” என்பதன் அர்த்தம் என்ன? நீங்கள், இயேசுவின் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தியதுண்டா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin