📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 16:1-14
உண்மையான செல்வம்
…தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார். லூக்கா 16:13
தேவனுடைய செய்தி:
உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள்.
தியானம்:
“உன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது” என்றான் செல்வந்தன். தொழிலை நான் இழந்தாலும், என்னை ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி ஒரு செயலைச் செய்ய எண்ணிய அதிகாரி, செல்வந்தனிடம் கடன் திரும்பித்தர வேண்டியவர்களை அழைத்து, நூறு கடன்பட்டவனின் பற்றுச்சீட்டில் ஐம்பதாகவும், எண்பதாகவும் குறைத்து எழுதினான். தகுதியற்ற அந்த அதிகாரியின் திறமையைக் கண்ட செல்வந்தன் அவனைப் பாராட்டினான். உலகத்திற்குரிய மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், ஆவிக்குரிய மனிதர் களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள் என்றார் இயேசு.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய இயலாது.
பிரயோகப்படுத்தல் :
யார் உங்களை நம்பி, மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
வேறொருவனுடைய பொருளில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டது ஏன்?
அநீதியான உலகப்பொருளால் சிநேகிதரை எங்கே சம்பாதித்து வைத்திருக்க வேண்டும்? ஏன்?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.
