குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 27 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  27:5-7

?  மனித தயவை நாடுவதேன்?

உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்… 1சாமுவேல் 27:5

? தியான பின்னணி:

தாவீது 600 பேருடன் ஆகீசிடம் தஞ்சமடைந்ததோடு, சிக்லாக் பட்டணத்தை கேட்டு வாங்கி தங்கியிருந்தான். சவுலின் கையிலிருந்து தப்பிவிட்டேன் என்ற எண்ணம், ஒரு பாதுகாப்பான நல்ல உணர்வை கொடுத்திருக்கலாம். ஆனாலும் அது நிரந்தரமற்றது.

? பிரயோகப்படுத்தல் :

❓  எவ்வளவு காலம் தாவீது சிக்லாக்கில் தங்கியிருந்தான் (வச.7)?

❓  தாவீதுக்கும் ஆகீசிற்கும் ஒரே எதிரி சவுல் என்றபடியினால், இணைந்தது போல, ‘சிலரை” தாக்கவும், எதிர்க்கவும் ஒன்றுசேர்வது அபாயகரமானது. நான் அப்படியாக நடந்துகொண்டதுண்டா?

❓  தவறான அல்லது சுயநலமான நோக்கத்துடன் நட்பை நாடுபவர்களைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? மற்ற நபர்களுடன் நீங்கள் வைத்துள்ள உறவிற்கும், நட்பிற்குமான மெய்யான நோக்கம்தான் என்ன?

❓  1சாமுவேல் 21:10-15 ன்படி, முன்பு ஆகீசிடம் தப்பியோடிய தாவீதுக்கும் இப்போது கூட்டுசேருவதற்குமுள்ள வித்தியாசம் என்ன?

❓  பாடுகளும் அழுத்தங்களும் நிறைந்த சூழலில், எனக்கு நானே எடுக்கின்ற தீர்மானங்கள் என்ன? தவறான செயல்பாடுகளில் மூழ்கையில், தவறான நட்புகூட நமக்கு உதவியாகவும் நலமாகவும் தோன்றுமல்லவா?

❓  இன்று நான் பிழையான நட்பை நாடுவதின் இரகசியமும், தேவையும் என்ன?  

? தேவனுடைய செய்தி:

▪️ தேவனிடம் தங்கியிருக்காது, மற்றவர்களிடத்தில் மட்டும் தங்கியிருப்பதும், அவர்கள் தயவில் இருப்பதும் நிரந்தரமற்றது. எதிர்காலத்தில் நிம்மதியற்றது.

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin