? சத்தியவசனம் – இலங்கை

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 103:8-18

பெறுமதிமிக்க ஆத்துமா

நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார். நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். சங்கீதம் 103:14

மண்ணுக்குள்ளே வாழும் மண்புழுவைக் கவனித்திருக்கிறீர்களா? அதற்கு என்ன மதிப்புண்டு? மண்ணைக் கிளறும்போது, வெளியில் வரும். பின்னர் மீண்டும் மண்ணுக்குள்ளே போகும். சிலவேளைகளில் மண்வெட்டியினால் வெட்டப்படும் சந்தர்ப்பங்களுமுண்டு. இதே நிலைதான் எமது சரீரத்திற்கும் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். மண்ணிலிருந்து எடுக்கப்பட்டோம், மீண்டும் மண்ணுக்கே திரும்பவும் போகிறோம். ஆனால் அந்த மண்புழு விவசாயிக்கு உதவியாயிருக்கிறதை எண்ணி அதற்கு யார் மதிப்புக் கொடுக்கிறார்? இந்த மண்ணான சரீரத்தில் வாழுகின்ற நமக்குள், தேவன் வைத்திருக்கும் நமது ஆவி, ஆத்துமா, அது மிகவும் பெறுமதிமிக்கது. அது நித்திய நித்தியமாய் தேவனோடு வாழவென்றே சிருஷ்டிக்கப்பட்டது.

நாமோ, என்றும் அழியாத நமது ஆத்துமாவைக் குறித்துக் கரிசனையற்றவர்களாய், அழிந்து மண்ணோடு மண்ணாகப்போகும் சரீரத்துக்காகவே நமது வாழ்வில் அதிகமாக பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது வாழ்வின் நோக்கம் என்ன என்று யாராவது கேட்டால்கூட, வைத்தியராவது, ஆசிரியராவது என்று நாம் எதிர்நோக்கும் தொழிலைக் கூறுகிறோமே தவிர, அதனூடாக எப்படியாக தேவன் மகிமையடைகிறார், இதற்கூடாகவும் அவரை எப்படி மகிமைப்படுத்தலாம் என்று நாம் சிந்திப்பதில்லையே, ஏன்?

“மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம் மாத்திரம் என்கிறேன்” (சங்.8:4) என்று தாவீது பாடி வைத்தார். அது எவ்வளவு உண்மையானது. வெறும் மண்ணினால் உருவாக்கப்பட்ட அவரது விரலின் கிரியைகளாகிய எம்மீது அவர் கொண்டுள்ள அளவு கடந்த அன்பையும், எமக்கு அவர் காட்டும் அளவுக்கதிகமான கிருபைகளையும் ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால் மெய்சிலிர்க்கும். ஆனால் நாம் மண்ணினால் உருவாக்கப்பட்டவர்கள் என்றாலும், வெறுமனே வாழ்ந்து வெறுமனே மண்ணோடு மண்ணாக அழிந்துபோகத்தக்க பொம்மைகளாக நம்மை தேவன் உருவாக்கவில்லை. மண்ணினால் உருவாக்கப்பட்ட நமது சரீர தோற்றத்தில் அவர் தமது ஜீவசுவாசத்தை ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் என்று அறிகிறோம் (ஆதி.2:7). இப்போது அவனது பெறுமதி கணக்கிடமுடியாத ஒன்று. அவனுக்குள் இனி அழியாத ஆத்துமா, தேவனுடைய மகிமை வைக்கப்பட்டுள்ளது. அந்த மகிமையை ஏதேனிலே மனிதன் இழந்துவிட்டபோதும், இழந்துபோன அந்த மகிமையைத் திரும்பவும் நாம் பெற்றுக்கொள்ள அவர் தாமே நமக்காக வந்தாரே! இப்போது என்ன சொல்லுவோம்? நமது பெறுமதிதான் என்ன? நாம் சாதாரணமானவர்களா? என்றும் அழியாத நமது ஆத்துமாவைக் கர்த்தருக்குள் காத்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அதைக் கறைப்படுத்தி தேவனைவிட்டு நம்மை நிரந்தரமாகப் பிரித்துப்போடவகைபார்க்கும் சத்துருவின் தந்திரங்களை முறியடித்து வெற்றிபெறுவோமா!

? இன்றைய சிந்தனைக்கு:

 என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி! என் முழுமையும் கர்த்தருக்கே அர்ப்பணித்து வாழ இன்றே நான் தீர்மானிப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

3 Responses

  1. cytotec online [url=http://cytotec24.shop/#]Misoprostol 200 mg buy online[/url] Abortion pills online

  2. diflucan candida [url=http://diflucan.pro/#]diflucan pill otc[/url] can i buy diflucan over the counter in canada

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *