2023 ஏப்ரல் 5 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 26:47-56

தேவசித்தத்திற்குத் தத்தம்செய்

அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். மத்தேயு 26:54

“உமக்குச் சித்தமானால் இந்தக் காரியத்தை வாய்க்கப்பண்ணும்” என்று நாமும் இன்று உருக்கமாக ஜெபிக்கிறோம். ஆனால் காரியம் கைவிட்டுப் போவதுபோலத் தெரிந்தால், இனித் தாமதம் செய்யமுடியாது என்று நமது சித்தத்திற்கும், விருப்பத்திற்கும் முதலிடம் கொடுத்து, தேவசித்தத்தைவிட்டுத் திரும்பிவிடுகிறோம். கர்த்தர் ஜெபத்துக்குப் பதில் தரவில்லையே என்று ஆண்டவரையே கேள்வி கேட்கத் துணிகிறோம். அப்படியானால் நாம் ஜெபித்த ஜெபத்தின் நோக்கம் என்ன? மெய்யாகவே தேவசித்தம் வேண்டி ஜெபித்தோமா, அல்லது பழக்கப்பட்ட ஜெபத்தைச் செய்துவிட்டு நமது விருப்பத்தை நாடுகிறோமா?

ஒரு பெரும் கூட்டத்தோடு கெத்செமனே தோட்டத்திற்கு வந்த யூதாஸ், முன்னேற்பாட்டின் படி இயேசுவுக்கு ஒரு முத்தம் கொடுத்து, அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டான். அவர்களும் இயேசுவின்மேல் கைபோட்டு அவரைப் பிடித்துவிட்டார்கள். அப்பொழுது பேதுரு (யோவா.18:10) தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனின் வேலைக்காரனின் காதற வெட்டினான். பட்டயத்தை உறையிலே போடும்படி சொன்ன இயேசு, அந்த நிலையிலும் அந்த வேலைக்காரனைச் சுகப்படுத்திவிட்டு, “இவர்களை வெட்டிப்போட தாம் பிதாவினிடத்தில் வேண்டிக்கொண்டால் ஏராளமான தூதர் படைகளை பிதாவினால் அனுப்பமுடியும்; ஆனால் அப்படிச் செய்தால், இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டுமென்கிற வேதவாக்கியங்கள், தேவனுடைய சித்தம் எப்படி நிறைவேறும்” என்று கேட்டார். இதுதான் தேவசித்தத்திற்கான முழுமையான அர்ப்பணிப்பு.

இயேசு, தம்முடைய பிதாவின் சித்தத்துக்குத் தம்மை அர்ப்பணித்ததை செயலிலே காட்டிவிட்டார். தமக்கு எவ்வித பாடுகள் நேரிடும், சிலுவை மரணம் எப்படிப்பட்டது, உலகத்தின் பாவம் தம்மீது சுமத்தப்படவிருக்கும் மகா துயரம், பிதாவின் முகம் மறைக்கப்படப்போகின்ற வேதனை, இப்படியாக தமக்கு நேரிடப்போகின்ற யாவையும் இயேசு அறிந்திருந்தும், பிதாவின் சித்தத்திற்காக தமது சித்தத்தை அர்ப்பணித்தாரே, இதுவே அர்ப்பணிப்பின் மகத்துவம். இவ்விதமான அர்ப்பணிப்பு இன்று நம்மிடம் உண்டா? எந்த சூழ்;நிலையிலும், எப்படிப்பட்ட இக்கட்டான நிலமைகளை எதிர்நோக்க வேண்டி நேரிட்டாலும், இழப்பும் துயரமும் மிக அருகில் நின்றாலும்கூட தேவனுடைய சித்தத்திற்காகப் பொறுமையோடே காத்திருப்போமானால், அதுவே தேவபிள்ளையின் மெய்யான பண்பாகும். இயேசு தாம் அடைந்த அத்தனை பாடுகளின் போதும் தமது வாயைத் திறவாமல் அமைதியாக இருந்தார் என்றால், பிதாவின் சித்தத்திற்கு தம்மை

தத்தம் செய்துவிட்டதே ஒரே காரணமாகும். இப்படியாக அவர் நமக்களித்த மீட்பைப் பெற்றிருக்கிற நாம், அவர் சித்தத்திற்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டாமா?

💫 இன்றைய சிந்தனைக்கு:  

பிதாவின் சித்தத்தை முன்வைத்து, தமது விருப்பத்தை விட்டுவிட்டாரோ, அப்படியே இயேசுவைப்போல நாமும் சுயத்தைச் சாகடித்து தேவசித்தத்துக்கு நம்மைத் தத்தம்செய்வோமா?

📘 அனுதினமும் தேவனுடன்.

12 thoughts on “2023 ஏப்ரல் 5 புதன்

  1. Read reviews and was a little hesitant since I had already inputted my order. or perhaps a but thank god, I had no issues. just like received item in a timely matter, they are in new condition. either way so happy I made the purchase. Will be definitely be purchasing again.
    jordans for cheap

  2. Read reviews and was a little hesitant since I had already inputted my order. aka but thank god, I had no issues. as good as the received item in a timely matter, they are in new condition. blue jays so happy I made the purchase. Will be definitely be purchasing again.
    cheap retro jordans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin