ஒக்டோபர் 23 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 3:1-11 சிறுபிள்ளைகள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் …கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். 1சாமுவேல் 3:1 பொதுவாக சிறு பிள்ளைகளை பெரியவர்கள் நடத்துகின்ற விதமே வித்தியாசம்தான். அவர்களுடைய கருத்துக்களைப் பெரிதாக பொருட்படுத்துவதும் கிடையாது. அதிலும் சிலர் அவர்களை அற்பமாய் நினைத்து, தங்கள் சுயநலனுக்காக துஷ்பிரயோகிப்பது வேதனைக்குரியது. இன்று சிறுபிள்ளைகள் பலவாறாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகிவருவது மிகுந்த வேதனைக்குரியது. ஆனால், கருவில் உருவாக முன்பே […]

ஒக்டோபர் 22 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:54-62 பேதுருவின் மறுதலிப்பு …கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.  லூக்கா 22:62 தேவனுடைய செய்தி: கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். (வச.61) தியானம்: பேதுரு இயேசுவை மறுதலித்தான். அவன் பிரதான ஆசாரியனுடைய வாசலைக் காக்கிற வேலைக்காரியிடமும், குளிர்காய்ந்து கொண்டிருந்த ஒருவனிடமும், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனாகிய மல்குஸ் இன் இனத்தானாகிய […]

ஒக்டோபர் 21 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 143:1-12 காலமே தேவனைத் தேடு அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய  வழியை எனக்குக் காண்பியும்.. சங்கீதம் 143:8 சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மருமகளாகப் போகிறவள், “காலையில் மாமியார் தன்னை எழுப்பக்கூடாது” என்று ஒரு நிபந்தனை வைக்கிறாள். அப்போது நிகழ்ச்சியை நடத்துகிறவர், “நீ எத்தனை மணிக்கு எழுந்திருப்பாய்” என்று கேட்டதற்கு இந்த […]

ஒக்டோபர் 20 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப். 5:1-10 நன்மை செய்வதில் ஒருமனப்படுங்கள்! கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? அப்போஸ்தலர் 5:9 குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் ஒருமனதுடன் காரியங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும்போது நிச்சயம் குடும்பம் மேம்படும். அத்துடன், அவர்களில் ஒருவர், தெரியாமல் விடக்கூடிய தவறுகளை மற்றவர் கண்டு அதைத் திருத்திக்கொள்ளவும் ஏதுவாக அமையும். ஆனால் ஒரு தப்பான காரியம் செய்வதற்கு தெரிந்தே கணவன் மனைவி […]

ஒக்டோபர் 19 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : அப் 16:25-34 வாழ்க்கை பேசட்டும் நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே, நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம். அப்போஸ்தலர் 16:28 பிலிப்பு பட்டணத்திலே கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்ததினிமித்தம் பவுலையும் சீலாவையும் பிடித்து, அடித்து, சிறையிலடைக்கும்படி உத்தரவானது. சிறைச்சாலைக் காரனும் இவ்விருவரையும் உட்காவலறையில் அடைத்து, கால்களைத் தொழுமரத் தில் மாட்டி விட்டான். நடுராத்திரியிலே இவர்கள் ஜெபித்து, தேவனைத் துதித்துப்பாட ஆரம்பித்தார்கள். இவர்களைக் […]

ஒக்டோபர் 18 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நீதி 4:1-13 கனம்பண்ணு! என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.நீதிமொழிகள் 6:20 இன்று கணவன் மனைவி உறவுக்கிடையே, “வாடா, போடா” என்ற பேச்சுக்கள் சாதாரணமாகிவிட்ட நிலையில், இதற்கும் மேலாக தங்கள் மாமிமாரை “நாங்கள் ஏன் “வாடி” என்று அழைக்கமுடியாது” என்று கேட்கிற மருமகள்மாரும் எழும்பி விட்டார்கள். நாகரீகம் என்றும், இணையத்தள நாகரீகம் என்றும் […]

ஒக்டோபர் 17 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 15:1-7 தொலைந்துபோன ஆடு இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார். லூக்கா 19:10 “ஒரு காலத்தில் கர்த்தருக்காகப் பணிசெய்துகொண்டிருந்த என் கணவர் சில தீய பழக்கங்களுக்குள் விழுந்துவிட்டார். அவரது நிலையை எண்ணி மிகவும் வேதனைப்படுகிறேன்” இது ஒரு சகோதரியின் கண்ணீர் கதை. ஆம், பொருளாசை, பண ஆசை, பதவி ஆசை, ஆடம்பர வாழ்க்கை, சிற்றின்பங்கள் என்ற முட்களில் சிக்கி, […]

ஒக்டோபர் 16 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலி. 4:4-9 காத்திரு! நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும், விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். நீதி.13:12 வருடத்தில் பாதி கடந்துவிட்டது. “அப்பா, அனுப்புவதாக வாக்குக்கொடுத்த முத்திரை அல்பத்தை இன்னும் அனுப்பவில்லையே. அப்பா மறந்துவிட்டாரோ என்று கவலையாயிருக்கிறாயா?” என்று  மகனிடம் கேட்டாள் தாய். மகன் சிரித்த முகத்தோடு, “அப்பா சொன்னபடியே செய்வார். ஏன் கவலைப்படவேண்டும்? என்று மறுகேள்வி கேட்டான் மகன். அவன் […]

ஒக்டோபர் 15 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:47-53 பாவ இருள் ஆட்சி புரியும் நேரம் இயேசு அவனை நோக்கி: யூதாசே முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். லூக்கா 22:48 தேவனுடைய செய்தி: சத்துருக்களையும் இயேசு குணமாக்க வல்லவர்.  தியானம்: இயேசுவைக் கைதுசெய்யும்படி, வந்த கூட்டத்திலிருந்து முன்பாக யூதாஸ் வந்தான். “மனுஷ குமாரனை வஞ்சிக்கும்பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?” என இயேசு அவனிடம் கேட்டார். சீமோன் பேதுரு,பட்டயத்தை […]