ஒக்டோபர் 13 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1இராஜா. 18:41-46 கார்மேகம் …வானம் மேகங்களினாலும், காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று. 1இராஜாக்கள் 18:45 வானம் கறுக்கும்போது, கருமேகம் சூழும்போது பொதுவாக நாம் உஷாராகி விடுவதுண்டு. குறிப்பாக துணி துவைக்கும் நாளில் வானம் கறுப்பதைக் கண்டாலே நாம் மிரண்டுபோவதுண்டு. ஆனால், விதை விதைத்துவிட்டுக் காத்திருக்கும் ஒரு விவசாயியோஎப்போது கார்மேகம் வானத்தில் உண்டாகும், எப்போது மழைமேகம் தோன்றும் என்று ஆவலோடு வானத்தைப்

ஒக்டோபர் 12 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : தானி 6:16-23 சோதனைகளிலிருந்து தப்புவிக்கிறவர்! …நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் தானியேல் 6:16 “கடவுளோடு அதிகம் நெருங்கி ஜீவிக்க விரும்பவில்லை” என்று கூறியவரிடம் காரணம் கேட்டபோது, “கிறிஸ்துவோடு அதிகம் நெருங்கி ஜீவிக்கும்போது அதிக பாடுகளைச் சந்திக்கவும் நேரிடுகிறது” என்றார். கிறிஸ்தவ வாழ்க்கை பாடுகள் நிறைந்த வாழ்க்கை என்பது உண்மைதான். ஆனால், பாடுகள் இல்லையேல் பரமனின் அன்பையும்,

ஒக்டோபர் 11 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 1:13-22 இருளில் பிரகாசிக்கும் தீபம் ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ  அறியாதிருக்கிறதுபோலவே …தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.  பிரசங்கி 11:5 உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனும், சகலவிதமான ஆசீர்வாதங்களும், ஐசுவரியங்களும் நிறைந்தவனுமாயிருந்த யோபுவின் வாழ்க்கையில், சடுதியாக, ஒன்றன்பின் ஒன்றாக இழப்பும், நோயும், துன்பங்களும் வரத்தொடங்கின. “கர்த்தருக்குப் பயந்து,

ஒக்டோபர் 10 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோசு 6:1-10 எரிகோ மதிலை விழுத்தியது யார்? விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது எபிரெயர் 11:30 பாடசாலை மாணவர்கள் வேத அறிவை எந்தளவுக்குப் பெற்றிருக்கிறார்கள் என்று அறிவதற்காக ஆலயக் குருவானவர் ஒரு வகுப்பறைக்குள் சென்றாராம். “எரிகோ மதிலை விழச்செய்தது யார்” என்று ஒரு மாணவனிடம் கேட்க, அவன் பயத்துடன், “நான் இல்லை” என்றானாம். அதிர்ச்சியடைந்த போதகர்

ஒக்டோபர் 9 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத். 15:22-27 கசப்பு மதுரமாகும் ..மாராவின் தண்ணீர்; கசப்பாயிருத்ததினால், அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது… யாத்.15:23 இஸ்ரவேல் மக்களின் வனாந்தரப் பயணமானது பலவிதங்களிலும் இன்றைய நமது வாழ்க்கைப் பயணத்திற்கு ஒத்ததாகவே இருக்கிறது. அவர்கள் இந்த வனாந்தரப் பயணத்தில் மூன்று நாட்களாக குடிக்கத் தண்;ணீர் இன்றி கஷ்டப்பட்டார்கள். மாரா என்ற இடத்திற்கு வந்துசேர்ந்தபோது, அங்கே தண்ணீர் இருந்தது; ஆனால் அது குடிக்கக்

ஒக்டோபர் 8 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 [ 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:35-46 நிறைவேறும் வேதவாக்கியம்! நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள்…லூக்கா 22:46 தேவனுடைய செய்தி: என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று இயேசு ஜெபம்பண்ணினார். தியானம்: “வேதவாக்கியம் சொல்கிறபடி, “மக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள்.” இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார் இயேசு. விசுவாசிக்க வேண்டிய

ஒக்டோபர் 7 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத். 17:8-16 ஊழியர்களைத் தாங்குவோம் …ஆரோனும், ஊர் என்பவனும்…மோசேயின் கைகளைத் தாங்கினார்கள்…யாத்திராகமம் 17:10,12 வாழ்க்கை கடினமாகும்போது, ஊழியப்பாதை நெருக்கடியாகும்போது யாராவது நம்மைத் தாங்குவார்களா? சாய்ந்துகொள்ள ஒரு தோள் கிடைக்குமா? என்று ஏங்கித் தவிக்கும் சந்தர்ப்பங்கள் உலக வாழ்வில் நமக்கு நிச்சயம் நேரிடத்தான் செய்யும். ஆனால் நாம் தனித்தவர்களே அல்ல. கானானை நோக்கிய பயணத்திலே இஸ்ரவேலருக்குத் தாகமெடுத்ததையும், கன்மலையிலிருந்து கர்த்தர் தண்ணீர்

ஒக்டோபர் 6 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத். 14:13-31 கர்த்தர் உனக்காக யுத்தம்பண்ணுவார்! கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள்… யாத்திராகமம் 14:14 சத்துருவின் பிடியிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்? அபாண்டமான வழக்கிலிருந்து என்னை விடுவிக்க யார் வருவார்? வேலை ஸ்தலத்திலும், வீட்டிலும் நடக்கின்ற அநியாயத்திற்கு எதிராக யார் எனக்காக நீதி செய்வார்? இன்று தேசத்தின் கொடிய பஞ்சத்தால் குடும்பம் தவிக்கிறதே, இந்தப் பஞ்சத்தில் என் குடும்பத்தை

ஒக்டோபர் 5 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத். 14:1-4, 21-28 ஏன் இந்த வனாந்தரப் பாதை? தேவன் அவர்களை… சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரவழியாய் …சுற்றிப் போகப்பண்ணினார் யாத்திராகமம் 13:17,18 “தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல” என்று பேச்சுவாக்கில் நாம் சொல்வதுண்டு. சிலசமயங்களில் நமது வாழ்விலும் அப்படியேதான் நடக்கின்றது. நேர்பாதை ஒன்றிருக்க, சுற்றுவழிப் பாதையில் யாரும் போவாரா? ஆனால், அன்று கர்த்தர் தமது மக்களை அப்படியேதான் நடத்தினார். எகிப்தின்

ஒக்டோபர் 4 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபிரெயர் 11:33-40 முன்னோக்கி ஓடுவோமாக! …திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, …இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். எபி 12:1 ஒரு பிரயாணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், நமது சிந்தனையில் ஒரு இலக்கு இருக்கவேண்டும். நாம் எங்கே போகிறோம் என்ற நிச்சயம் வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நாம் அலைந்து திரியவேண்டியிருக்கும். அத்தோடு, சரியான இலக்கு இல்லாவிட்டால், நாம்

Solverwp- WordPress Theme and Plugin