31 மார்ச், 2022 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1இராஜா 2:1-4,12 சொல்லியும் செய்யாதிருக்கலாமோ? …அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. 1இராஜாக்கள் 2:4 சொல்லியும் செய்யாதிருக்க, சொல்லாமற்போனால் என்னவாகும்? சொல்லாவிட்டால், சொல்லவில்லையே என்று தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், நல்வாழ்வுக்குரிய யாவையும் சொல்லி, எழுதித் தந்தவர் ஆண்டவர். இஸ்ரவேலுக்கு மாத்திரமல்லாமல், இன்று நமது கைகளிலேயே தந்திருக்கிறார். சொன்னதைக் கேட்டு, ஏற்று, நடப்பதில் நமக்கு என்னதான் பிரச்சனை? நம்மை நாமே சற்று

30 மார்ச், 2022 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 71:1-23 வயது ஒரு பொருட்டே அல்ல! …முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக. சங்கீதம் 71:18 வெளியே அல்ல, உள்ளான மனுஷனில் யாராய் இருக்கிறோமோ அதுவே நமது உண்மை நிலை. முதிர்வயதாகி, சமகால நினைவுகள் மறக்கப்பட்டு, பழைய நினைவுகள் துளிர்விடும் நிலைக்குத் தள்ளப்படும்போது (டிமென்ஷியா), முதியவர்களும் எதையும் மறைக்கத் தெரியாத சிறுபிள்ளைபோல ஆகிவிடுகிறார்கள். சில முதியவர்களின் நடப்புகள் ஆச்சரியத்தைத்

29 மார்ச், 2022 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2சாமு 12:7-14 சங் 51 என்னைக் குணமாக்கும் கர்த்தாவே! தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10 “38 வருடங்கள் தாமதிக்காமல் கர்த்தர் இரட்சித்திருந்தால், வாழ்வில் ஏற்பட்ட பல துன்பங்களைத் தவிர்த்திருக்கலாமே என்று நான் சிந்திப்பதுண்டு. ஆனால், தேவனது வேளை பிழைப்பதில்லை; 38 வருட கால தோல்விகளும் விழுகைகளும் என்னை உணரச்செய்தது.

28 மார்ச், 2022 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :சங் 51:1-4 லூக் 15:11-24 வழி என்ன? தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாப்பானதை நடப்பித்தேன்… சங்கீதம் 51:4 விழுந்துபோன இந்த உலகிலே, ஆவிக்கும் மாம்சத்துக்கும் இடையே இடைவிடாத போராட்டம் நடக்கும் வாழ்விலே பாவம்செய்யத் தூண்டும் சோதனைகளுக்கு நாம் முகங்கொடுப்பதைத் தவிர்க்கமுடியாது. அதற்காக, பாவத்துக்கு இடமளிக்க முடியுமா? எத்தனை தரம்தான் பாவத்தில் விழுந்து விழுந்து எழுவது?

27 மார்ச், 2022 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2சாமு 12:1-14 நீயே அந்த மனுஷன்! அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்… என்றான். 2சாமுவேல் 12:7 “ஒரு வேகத்தில், பின்விளைவைச் சிந்திக்காமல், ஒரு பெருந்தவறு செய்துவிட்டேன். அது மனசாட்சியை வருத்தினாலும், தாவீதைப்போல கொடிய பாவம் செய்யவுமில்லை, இதனால் யாருக்கும் தீங்கும் இல்லை என்ற ஒரு பொய்திருப்தி எனக்குள். நாட்கள் செல்ல அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன். ஒருநாள்

26 மார்ச், 2022 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 14:25-35 முதலில் திட்டமிடுங்கள் உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? லூக்கா 14:34 தேவனுடைய செய்தி: ஒருவன் இயேசுவைப் பின்பற்றும்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிலுவையை (துன்பத்தை) சுமக்காவிட்டால் அவன் சீஷனாக முடியாது.  தியானம்: வேலையை முடிப்பதற்குத் தேவையான பணம் உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு போரை நடத்துவதற்கு முதலில் அமர்ந்து திட்டமிடவேண்டும். இல்லாவிட்டால் சமாதானத்திற்கான

25 மார்ச், 2022 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 13:13-14 15:22-23 கீழே தள்ளும் கீழ்ப்படியாமை நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான்… 1சாமுவேல்15:11 தற்பரிசோதனை செய்து, மாற்றப்படவேண்டிய பகுதிகளை உண்மை உள்ளத்துடன் கர்த்தர் கரத்தில் கொடுக்கும்போது, அவர் அவற்றையும் சரிசெய்து, மறைவானவற்றையும் நிச்சயம் சரிசெய்வார். ஆண்டவருக்கும் நமக்குமான உறவை அடிக்கடி சிதைக்க முற்படுவது நமது கீழ்ப்படியாமை, இன்னொரு

24 மார்ச், 2022 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நியா 6:7-24 நானா? என்னாலே முடியுமா? அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: உனக்கு இருக்கிற அந்தப் பலத்தோடே போ. உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். நியாயாதிபதிகள் 6:14 தடைகளைத் தாண்டி முன்செல்ல பல வழிகள் இருக்கலாம். ஆனால் இரண்டு விடயங்களை இன்று நாம் சிந்திப்போம். ஒன்று, அந்தத் தடைக்கு நான் காரணமா? அப்படியானால், அதைச் சரிசெய்யவேண்டும். அடுத்தது, தடையை

23 மார்ச், 2022 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத் 3:1-12 எண்பதிலும் முடியும்! நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். யாத்திராகமம் 3:10 நம்மால் முடியும் என்றிருக்க முயற்சிகள் தோல்வியில் முடியும்போதும், இனி எதுவும் முடியாது என்றிருக்க நினையாதவை நடக்கும்போதும், இரண்டையுமே புரிந்துகொள்வது கடினமே. ஆனால், எதை எப்போது, யாரைக்கொண்டு செய்யவேண்டும் என்பதை அறிந்திருக்கிற கர்த்தர் அந்தந்தக் காலத்தில்

22 மார்ச், 2022 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 32:22-32 உன் பெயர் என்ன? அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார். அவன் யாக்கோபு என்றான். ஆதியாகமம் 32:27 நாம் யார் என்று நமக்கே சரியாகத் தெரியாததே நமது அடிப்படை பிரச்சனை. எனது பெயர், பெற்றோர், வேலை, அந்தஸ்து, குடும்பப் பெருமை எல்லாம் எனக்குத் தெரியுமே என்று நாம் நினைக்கலாம். உண்மைதான்; ஆனால் இவை யாவும் சரீர