2 ஆகஸ்ட், திங்கள் 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 6:8-13 நோவாவின் உத்தமம் நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆதியாகமம்  6:9 இன்று உலகமும் அதன் காரியங்களும் தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது. நாமும் பலதடவை, “எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள், நானும் செய்கிறேன், இதுதான் எல்லாருக்கும் பிடிக்கிறது. அதனால் (பிழை என்றாலும்) நான் செய்தேயாகவேண்டும்” என்று பலசாட்டுகளைச் சொல்லி, தவறான காரியங்களைச் செய்துவிடுகிறோம். நோவாவின் காலத்தில் பூமியிலே

1 ஆகஸ்ட், ஞாயிறு 2021

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 6:1-7 கர்த்தரின் மனஸ்தாபம் தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. ஆதியாகமம் 6:6 தனது எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்துகொண்ட மகனிடம், “நான் உன்னைப் பிள்ளையாக பெற்றதிலும்பார்க்க நான்கு தென்னம்பிள்ளைகளை வைத்திருந்திந்தால் எனக்கு இன்றைக்கு ஒரு தேங்காயாவது கிடைத்திருக்கும்” என்றார் தந்தை. தான் பெற்ற மகனைக்குறித்து ஒரு தகப்பன் இப்படிச் சொல்லுவாரானால் அவரது மனம் எவ்வளவாக உடைக்கப்பட்டிருக்கும்

31 ஜுலை, 2021 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 7:24-35 தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் பெரியவர் இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான். லூக்கா 7:27 தேவனுடைய செய்தி: தேவன் தரும் ஞானமானது நீதியுள்ளதாய் இருக்கிறது. தியானம்: மனிதராய்ப் பிறந்தவர்களுக்குள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை என கூறிய இயேசு, தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் யோவானைப் பார்க்கிலும் பெரியவனாய் இருக்கிறான் என்றார். விசுவாசிக்க

30 ஜுலை, 2021 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 3:15-19 1இராஜா 8:54-61 தவறிப்போகாத வார்த்தை அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை. 1சாமுவேல் 3:19 பல பிரமுகர்களைப் பலர் புகழ்ந்துபேசக் கேட்டிருக்கிறோம். மரண ஆராதனைகளில் மரித்தவர்களைக்குறித்து நல்லவிதமாக மாத்திரமே பேசுவதுமுண்டு. இவர் சொன்னால் சொன்னபடியே செய்துமுடிப்பார் என்று கூற கேட்டதுண்டா? நம்மைப்பற்றியாவது இப்படி யாராவது சொல்லத்தக்கதாக நமது வாழ்வு உள்ளதா? சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி மனிதர் மாறுவதுண்டு. ஜெபத்தில்

29 ஜுலை, 2021 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 5:17-26 உள்ளும் புறமும் சுத்திகரிக்கும் வார்த்தை பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்… லூக்கா 5:24 நாம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் இரண்டு வகை. ஒன்று, வெளிப்படையானது, வறுமை, நோய், புறக்கணிப்பு, தோல்வி என்று பல. நாம் முயற்சித்தால் இவற்றைச் சரிப்படுத்த பல வழிகள் உண்டு. அடுத்தது, உள்மனப்போராட்டம். இது சற்று கடினமானது. வெளியே சொல்லவோ, பிறருடன் பகிர்ந்துகொள்ளவோ முடியாதது.

28 ஜுலை, 2021 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 1:21-34 அதிகாரமுள்ள வார்த்தை அவர் …அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால், அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். மாற்கு 1:22 இவ்வுலகில் ஏராளமான போதனையாளர்கள், பேச்சாளர்கள் உண்டு. ஒருவரது பேச்சின் தொனி, வார்த்தைப் பிரயோகம், போதிக்கின்ற தோரணை வேறுபட்டாலும், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியம், எங்கிருந்து பேசுகிறார்கள், யாருடைய அதிகாரத்தில் போதிக்கிறார்கள் என கவனிப்பது அவசியம். இரண்டாம் உலக யுத்தத்தில் தன் அதிகார பேச்சினால்

27 ஜுலை, 2021 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 11:25-45 மரணக்கட்டை முறிக்கும் வார்த்தை லாசருவே வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். யோவான் 11:43,44 லாசரு மரித்து, அடக்கம் முடிந்து, நான்கு நாட்களாயிற்று. “ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” என்று இரு சகோதரிகளும் அழுதார்கள். இயேசு நேரத்துக்கு வந்திருந்தால், லாசரு மரிக்காமல் குணம்பெற்றிருப்பான் என்பதை அறிந்த அவர்கள், மரித்தாலும் அவன்

26 ஜுலை, 2021 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 11:1-26 வாழ்வு தரும் வார்த்தை இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யோவான் 11:25,26 என் தகப்பனார் தன் கடைசிக் காலத்தில், அடிக்கடி கண்களை மூடி தான் இறந்துவிட்டது மாதிரி நடிப்பார். பின்னர் கண்களை விழித்து, “நான்தானே செத்தாலும் வாழுவேன்” என்பார். எப்படி என்று கேட்டால், “இயேசுதானே சொல்லியிருக்கிறாரே” என்பார். நிகழ் கால சம்பவங்களை மறந்து,

25 ஜுலை, 2021 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 8:1-11 வாழ்வளிக்கும் வார்த்தை இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். யோவான் 8:11 “நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே.” நான்கு சொற்கள், ஆனால், நறுக்கென்று இருதயத்தை ஊடுருவிக் குத்துகின்ற சொற்கள். மன்னிப்பளிக்கும் இயேசுவின் நல் வார்த்தைகளை நாம் கிரகித்துக்கொள்வது அவசியம். “நான் நல்லவள் அல்ல என்ற சிந்தனையினால் பாதிக்கப்பட்டிருந்தேன். நான் ஒரு விபசாரியும்

24 ஜுலை, 2021 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 7:18-23 துன்பத்திலும் துணை அவரே …என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். லூக்கா 7:23 தேவனுடைய செய்தி: இரட்சகராகிற இயேசு கிறிஸ்துவை தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பாக்கியவான்கள். தியானம்: “வர இருப்பவர் நீர்தானா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என யோவான் கேட்டதாக அவனது சீடர்கள் இயேசுவிடம் வந்து கேட்கின்றார்கள். அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு