1 ஏப்ரல், 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 13:1-2, 21-27 பிசாசுக்கு இடங்கொடுத்தான்! அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு: …நீ செய்கிறதைச் சீக்கிரமாய் செய் என்றார். யோவான் 13:27 இன்று பெரிய வியாழன். ஆண்டவரின் கடைசி இராப்போசனத்தை நினைவுகூரும் நாள். நாம் பயபக்தியோடு ஆண்டவரின் பந்தியில் சேர வந்திடும் நாள். திருவிருந் துக்கு முக்கியத்துவம் கொடுத்து திருவிருந்து ஆராதனையில் மட்டும் கலந்துகொள்ளுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

31 மார்ச், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 13:28-30 பண ஆசை யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், …இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். யோவான் 13:29 ‘காட்டிக்கொடுத்தான் முப்பது வெள்ளி. காசுக்காகவே கர்த்தர் இயேசுவை, கொலை செய்யவே கொண்டுபோனாரே கொல்கொதா மலைக்கு இயேசுவை” பொதுவாக இந்நாட்களில் நாம் பாடும் ஒரு பழைய பாடல் வரிகள் இவை. இந்நாட்களில் ஆண்டவரின் பாடுகளையும், மரணத்தையும் நாம் நினைவுகூரும் அதேவேளை, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசை

30 மார்ச், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 22:39-48 முத்தத்தினாலேயா? இயேசு அவனை நோக்கி, யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். லூக்கா 22:48 முத்தம் செய்தல் என்பது ஒரு அன்பின் வெளிப்பாடு. தாய் தன் குழந்தையை அரவணைத்து முத்தமிடல் நல்லதொரு உதாரணம். வேதாகமத்தில் பல இடங்களில் நாம் இந்த முத்தமிடல் சம்பவத்தை வாசிக்கிறோம். நகோமி தன் மருமக்களை முத்தமிட்டுக் கிளம்புதல், ரூத் 1:9. தாவீது அப்சலோமை முத்தமிட்டான், 2சாமு 14:33.

29 மார்ச், 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 6:64-71 பிசாசாயிருக்கிறான்! இயேசு அவர்களை நோக்கி, பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். யோவான் 6:70 முற்றும் துறந்த முனிவர்கள் இருவர் ஒரு ஆற்றைக் கடக்க முற்பட்டபோது, அங்கே ஒரு பெண் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைக் கண்டனர். அவளைக் காப்பாற்ற ஒருவர் எண்ணியபோது, மற்றவர் அப்படிச் செய்யாதே, நாம் பெண்ணைத் தொடக்கூடாது என்றான். ஆனால் முன்னவரோ ஆற்றில் இறங்கி அப்பெண்ணைக்

28 மார்ச், 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 21:1-11 உன்னதத்தில் ஓசன்னா முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, ‘உன்னதத்திலே ஓசன்னா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். மத்.21:9 குருத்தோலை ஞாயிறு என்பது உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான நாள். பொதுவாக ஆலயங்களில் பிள்ளைகளுக்கு இந்த நாளில் முக்கியத்துவம் கொடுத்து, பிள்ளைகளே ஆராதனையையும் நடத்துவார்கள். குருத்தோலைகளைக் கையில் பிடித்த வாறு, ஓசன்னா பாடிக்கொண்டு பிள்ளைகள் ஆலயத்துக்குள் பிரவேசிப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

27 மார்ச், 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 18:38-44 ஜெபஆலயங்களில் பிரசங்கம் … தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். லூக்கா 4:43 தேவனுடைய செய்தி: கர்த்தருடைய ராஜ்யத்தின் பிரசங்கங்களை நாம் கேட்கவேண்டும். தியானம்: இயேசு கலியாவிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டு வந்தார். அத்துடன், அவரது பிரசங்கங்களைக் கேட்ட மக்களிடம் தமது அற்புதங்களை நடப்பித்தார். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: தேவன் அற்புதம் செய்பவர். அவருடைய ராஜ்யத்திற்குரிய வர்களாகிய நாம்

26 மார்ச், 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஏசாயா 53:1-7 நம்முடைய பாடுகளை ஏற்றார் மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். ஏசாயா 53:4 ஒரு தாயார், யாராவது வேதனைப்படுவதைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் போது, ‘ஆண்டவர் பட்ட வேதனைகளை நினைத்துப் பாருங்கள். அத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது உங்கள் வேதனையெல்லாம் ஒன்றுமில்லாததாகிவிடும்” என்பார்கள். அதுபோலவே தனக்கு ஏதாவது வேதனையோ உடல் நோவோ ஏற்பட்டாலும், ஆண்ட வரின் பாடுகளை

25 மார்ச், 2021 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 19:17-42 விலாவிலே குத்தப்பட்டார். ஆகிலும், போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினான், உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. யோவான் 19:34 தேவனுடைய அநாதி திட்டத்தின்படியே, ஆண்டவருடைய பாடுகள் மரணம் எல்லாம் நிகழ்ந்தது. அவர் எங்கள்மீது கொண்ட அநாதி சிநேகத்தாலேயே எம்மை மீட்கும்படிக்கு தமது சொந்தக்குமாரன் என்றும் பாராமல் எங்கள் எல்லாருக்காகவும் பாவமில்லாத அவரைப் பாவமாக்கினார். இந்த அன்புக்கு நாம் எம்மாத்திரம் என்று

24 மார்ச், 2021 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா7:36-50 மனம்வருந்தினாள்! …அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, …பரிமளதைலம் பூசினாள். லூக்கா 7:38 எத்தனை தவறுகள் செய்தாலும், எத்தவறுமே செய்யாதவர்கள்போலத் தங்களைக் காட்டிக்கொள்கிற சிலர் இருக்கிறார்கள். தவறை ஒத்துக்கொள்பவர்களுக்கு அவர்கள் திருந்துவதற்கு உதவிசெய்யலாம். தவறுசெய்துவிட்டு எதுவுமே செய்யாதவர்கள்போல் நடிப்பவர்களை எதுவும் செய்யமுடியாது. தவறைத் திருத்திக்கொள்ள முதற்படி மனம்வருந்துதல் மட்டுமே. இங்கே இந்தப்பெண் ஒரு பாவியான ஸ்திரீ என்று

23 மார்ச், 2021 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 2:1-12 வியாதியா? பாவமா? இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி, மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். மாற்கு 2:5 ஒருமுறை டாக்டர் புஷ்பராஜ் தனது ஊழியத்தில் நடந்த ஒரு சம்பவத்தை இப்படியாகப் பகிர்ந்துகொண்டார். ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைக்கு மிகவும் சுகவீனம் என்று சொல்லி ஜெபிக்கக் கேட்டுக்கொண்டார்களாம். அவரும் சென்று ஜெபித்துவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் குழந்தை சுகமடைந்துவிட்டது என்று