4 ஜனவரி, 2021 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 6:1-11 தேவனோடு சஞ்சரிப்போமா! நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயி ருந்தான்.  ஆதியாகமம் 6:9 அன்றன்று செய்யவேண்டியவற்றைக் குறித்துவைப்பதற்காக ஒரு குறிப்புப் புத்தகமோ, ஒரு டயரியோ நாம் வைத்திருப்பதுண்டு. தன் கிறிஸ்தவ நண்பர், ‘பிதாவே, உம் பெலத்தால் இந்த நாளுக்குள் செல்லுகிறேன்” என்று காலையில் ஜெபித்தபின், விசேஷமாய் ஏதாவது நடந்தால், அதாவது யாருக்காவது உதவிசெய்ய நேர்ந்தால், சுவிசேஷம் சொல்லத் தருணம் கிடைத்திருந்தால், […]

3 ஜனவரி, 2021 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 1:1-31 நாம் சம்பாதிக்காத இன்னொரு ஆண்டு நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 1:28 நாம் வியர்வை சிந்தி உழைக்காத, நமக்குச் சொந்தமில்லாத, நாம் கற்பனையே பண்ணாத ஒரு தொகை பணத்தையோ, சொத்தையோ நமது பெற்றோர் நம்மிடம் திடீரென்று கொடுத்து, ‘இதோ, இவையெல்லாம் உனக்குத்தான். இதைப் பெருக்குவதும், பாதுகாப்பதும், அல்லது […]

2 ஜனவரி, 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:27-35 சிமியோனின் பாடல் உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது லூக்கா 2:32 தேவனுடைய செய்தி: புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், இஸ்ரவேல் ஜனங்களுக்கு  மகிமையாகவும் மேசியா திகழ்வார். தியான பின்னணி: தங்களை மட்டுமே மீட்க இரட்சகர் வருவார் என யூதர்கள் அன்று எதிர்பார்த்திருந்தனர். மீட்பரைக் கையில் ஏந்திய சிமியோன், ஒரு மிஷனரி,  அருட்பணி பாடலையும் தீர்க்கதரிசன வார்த்தைகளையும் பொழிந்தார். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: […]

1 ஜனவரி, 2021 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 46:1-11 இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! மகத்துவமான ஒரே ராஜா உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார். சங்கீதம் 47:2 எல்லா விக்கினங்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்து, இன்னுமொரு வருடத்தைக் காணும்படி வழிநடத்திவந்த தேவன் ஒருவருக்கே சகல கனமும் மகிமையும் என்றென்றும் உண்டாவதாக. கடந்தவருட கசப்பான அனுபவங்கள், எதிர்பாராத சம்பவங்கள், லட்சக்கணக்கான உயிரிழப்புகள், கண்ணீரில் மிதந்த குடும்பங்கள், முழு உலகமுமே ஆடிப்போகுமளவுக்கு முடிவு […]

31 டிசம்பர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எபிரெயர் 13:14-21 இலக்கைத் தவறவிடாதிருப்போம்  நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித் தேடுவோம். எபிரெயர் 13:14 உலகின் பல நாடுகளை வெற்றிபெற்ற ஒரு மாவீரன், தனது படைகளோடு சொந்த நாட்டிற்கு திரும்பி வரும்வழியில், நதிகள் காடுகள் கரடுமுரடான பாறைகளைக் கடந்து, போர்க் களைப்புடன், பல வீரரை இழந்துவிட்ட இழப்புடன், செங்குத்தான் மலைப்பாதைக் கூடாக வந்து மிக உயர்ந்த ஆல்ப்ஸ் மலையருகே கடந்துசெல்ல […]

30 டிசம்பர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 34:1-22 எக்காலமும் ஸ்தோத்திரமே!  கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. சங்கீதம் 34:15  ஒரு விளையாட்டு வீரன் தன் சகாக்களின் எரிச்சல் காரணமாக  மனமடிவுக்குள்ளானான். இதனை அறிந்த தகப்பனோ, ‘மகனே, நீ பயப்படாதே. உன் திறமை என்னவோ அதை வெளிப்படுத்து. மிகுதியை நான் பார்த்துக்கொள்வேன். உன்மேல் என் கண்கள் இமை கொட்டாமல் விழித்திருக்கும்” என திடப்படுத்தினார். அவன் […]

28 டிசம்பர், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மாற்கு 11:19-26 அழகான மன்னிப்பு! ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோ.3:13 வெளிப்படையான பல பிரச்சனைகளுக்கும் துயரங்களுக்கும், வெளியே தெரியப்படாத சில உட்காரணிகள் இருக்கக்கூடும். இந்தத் தெரியப்படாத உட்காரணிகளில் மிக முக்கியமானதொன்று, நமக்கு விரோதமாக துரோகமாக நடந்துகொள்கின்ற ஒருவரை மன்னிக்கமுடியாமல் இருப்பதே. ‘நான் மன்னித்துவிட்டேன், ஆனால் அவரோடு எனக்கு ஒன்றும்வேண்டாம்” என்று சொல்லுகிறவர்களும் உண்டு. அதுவும் மன்னிக்க […]

29 டிசம்பர், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: நெகேமியா 6:1-9 நாம் பெரிய அலுவற்காரர்!  நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான்; வரக் கூடாது….மினக்கெட்டுப்போவானேன். நெகேமியா 6:3  பல வருடங்களுக்கு முன், இரவு புகையிரதத்தில் எல்லோரும் அயர்ந்த நித்திரையில் தூங்கிவழிந்தனர். திடீரென்று முழக்கம் போன்ற சத்தம்@ எதிரே வந்த புகையிரதத்தோடு மோதியதால், புகைவண்டியிலிருந்த பலர் இறந்துவிட்டனர். தண்டவாளத்தை மாற்றும் ஒரு பணியாளரின் தவறு காரணமாக பெரும் நாசம் ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தவறுதலாக […]

27 டிசம்பர், 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 13:1-5 ஆச்சரியமான அன்பு தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். யோவான் 13:1 ஒருதடவை, சாது சுந்தர் சிங் இமயமலை அடிவாரத்தில் பயணஞ்செய்துகொண்டிருந் தார். அப்போது, பற்றியெரிந்த காட்டுத்தீயை அணைக்க முயற்சித்த ஒரு மக்கள்கூட்டத் தைக் கண்டார். அதில் பலர் எரிந்துகொண்டிருந்த ஒரு மரத்தைக் குறிப்பாக அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை அணுகி விசாரித்தபோது, அந்த மரத்திலிருந்த ஒரு […]

26 டிசம்பர், 2020 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:21-26  நியாயப்பிரமாணத்தின்படியே…  நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங் களையானாலும் …நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். மத்தேயு 5:17 ?    தேவனுடைய செய்தி: கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார். கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்த நான் செய்தது என்ன? ?  தியானம்: இரட்சகர் பிறந்தார். ஆதியாகமம் 17ல், விருத்தசேதனம் ஆபிரகாமுடனான  உடன்படிக்கை. முன்பு அறிவிக்கப்பட்டபடி இயேசு என பெயரிடப்பட்டது. லேவி 12 ன்படி 40 நாட்களுக்குப் பின்பு சுத்திகரிப்பு நிறைவேற்றப்பட்டது. யாத்திராகமம் […]