3 செப்டெம்பர், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஏசாயா 25:6-9 ?  சொன்னது சொன்னபடியே ஆகும்! கர்த்தரே இதைச் சொன்னார்.  ஏசாயா 28:8 ‘மகன், உன் விருப்பப்படியே நீ மேற்படிப்புப் படிக்கமுடியும்” என்ற அம்மாவை, ‘நம்மிடம் வசதி இல்லையென்று எனக்குத் தெரியும். நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்று தேற்றினான் மகன். அதற்கு அம்மா சொன்ன ஒரே பதில், ‘இதைச் சொன்னது நான் அல்ல; உன் அப்பா”. அதன்பின்னர் மகன் ஒன்றுமே சொல்லவில்லை. இன்றைய வேத

2 செப்டெம்பர், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஓசியா 14:3-7 ? மதேவனுடைய பனித்துளிகள் நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன். அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான். லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். ஓசியா 14:5 சுத்திகரிப்பு என்ற பெயரில் புற்தரை வெட்டப்பட்டு சிதைக்கப்பட்டிருந்த காட்சி மனதுக்கு கஷ்டமாயிருந்தது. அதிகாலையில் புற்களின் நுனியிலே பனித்துளிகள் ஜொலிக்கும்!  ஓரிரு நாட்களில் என்ன அற்புதம்! அந்தப் புற்தரை மீண்டும் அழகான மென்பச்சை மெத்தைபோல அழகாகக் காட்சிதந்தது. பனித்துளிகள், சிதைவை மாற்றி,

1 செப்டெம்பர், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  யாத்திராகமம் 2:23-25 ?  அடுத்தது என்ன? தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். யாத்திராகமம் 2:24 மிகவும் பயங்கரமான, ஆனால் உருவத்தில் மிக நுண்ணிய, கண்களுக்குப் புலப்படாத ஒரு எதிரியுடனான போரில் சிலரை இழுந்துவிட்டதோடு, பலரும் பெலவீனர்களாகி விட்டனர்; துன்பத்தைவிட்டு வெளிவரமுடியாமல் தவிக்கிறவர்களும் உண்டு. இந்தச் சூழ்நிலையில், உயிருடன் பாதுகாக்கப்பட்ட நாம், இனி என்ன செய்யப்போகிறோம்?

31 ஆகஸ்ட், 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 26:1-23 ? மேட்டிமையா? தாழ்மையா? அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து…  2நாளாகமம் 26:16 ‘அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.” இது பழமொழி அல்ல; வேதாகம வார்த்தை (நீதி.16:18). ‘எனக்கு எல்லாம் இருக்கிறது” ‘என்னை வெல்லத்தக்கவன் யார்” என்ற நினைவின் பின்னேதான் மேட்டிமை வெடித்து கிளம்புகிறது; அல்லது அதீத

30 ஆகஸ்ட், 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 25:1-28 ?  முழு மனதுடன்… அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை. 2நாளாகமம் 25:2 ‘இந்நாட்களில் பாதி கிறிஸ்தவம், பாதி உலகம் என்பதுபோலத்தான் கிறிஸ்தவ வாழ்வு இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. உணர்ச்சிவசப்பட்டு ஆராதிக்கிறார்கள்; அடுத்த நிமிடமே அவர்களது நடவடிக்கையே மாறுபாடாய்த் தெரிகிறது” என்று ஒரு நண்பி சொன்னபோது என்னால் அதைத் தட்டிக்கழிக்கமுடியவில்லை. ஏழு வயதில் ராஜாவாகி, நாற்பது

29 ஆகஸ்ட், 2020 சனிக்கிழமை

குறிப்பு- வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 27 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  27:8-12 ?  நம்பிக்கைத் துரோகம் அவன் பெலிஸ்தரின் நாட்டுப்புறத்திலே இருந்த குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டு வந்தான். 1சாமுவேல் 27:11 ? தியான

28 ஆகஸ்ட், 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 24:17-27 ?♀️  உறுதியான வேலி! யோய்தா மரணமடைந்த பின்பு, யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள். அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான். 2நாளாகமம் 24:17 ராணியின் குடும்பம் மகிழ்ச்சியோடு வாழ்ந்துவந்தனர். குடும்பத்தை அதிகம் நேசித்த அவளது கணவன், குடும்பத்துக்கு ஒரு வேலியாக இருந்தான். அந்த வேலியைத் தாண்டி எவரும் எதுவும் நுளைய முடியாதிருந்தது. எதிர்பாராத விதத்தில் அவன் புற்றுநோய் கண்டு மரித்தபோது ராணியின்

27 ஆகஸ்ட், 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 24:16 ?  யார் என் ஆலோசனைக்காரர்? ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 2நாளாகமம் 24:2 ராஜாக்கள், நாளாகமம் புத்தகங்கள் நாம் விரும்பிப் படிக்கின்ற புத்தகங்கள் என்று சொல்ல முடியாது. ஒருசில ராஜாக்களைக்குறித்து நாம் அறிந்திருந்தாலும், இந்த இரண்டு புத்தகங்களும் நமது இன்றைய அன்றாட வாழ்வுக்கு ஆலோசனையாகவும் எச்சரிப்பாகவும் இருக்கிறதை மறுக்கமுடியாது. இந்த மாதம் முழுவதும் இஸ்ரவேலை ஆண்ட

26 ஆகஸ்ட், 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 23:11-21 ? இரண்டு பெண்கள் …ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம்… 2நாளாகமம் 21:7 கர்த்தர் வாக்கு மாறாதவர் என்று அறிந்து, ஏற்றுக்கொண்டிருந்தாலும், மனதார அவரை நாம் நம்புகிறோமா? நம்பினால் அதற்கேற்றபடி நமது நடவடிக்கைகள் இருக்கவேண்டுமே. எல்லாம் கைவிட்டுப்போனதுபோல இருந்தாலும், கர்த்தர் யார் யாரையோ எழுப்பி, தம் வாக்கை நிச்சயம் நிறைவேற்றியே தீருவார் என்பதற்கு வேதாகமமே நமக்குச் சாட்சி.

25 ஆகஸ்ட், 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  2நாளாகமம் 21, 22 ?  என் மரணத்திலும் விரும்புவாரில்லாமல் இறந்துபோனான். ராஜாக்களின் கல்லறையில் அவனை வைக்கவில்லை. 2நாளாகமம் 21:20 காலைவேளையில், இருக்கைகள் கட்டப்பட்டுள்ள அநேகமான பேரூந்து தரிப்பிடங்களிலே சிலர் படுத்து உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறீர்களா? அழுக்கான உடையுடன், அழுக்கான தோற்றத்துடன் உறங்கிக்கொண்டிருப்பார்கள், மனதுக்குக் கஷ்டமாக இருக்கும். இவர்களும் ஒரு பெற்றோருக்குப் பிள்ளையாக பிறந்து வளர்ந்த மனிதர்தானே! இப்போது, தேடுவாரில்லாமல் அலைகிறார்கள். இவர்கள் இறந்தால், காவற்துறையும், மாநகர