ஜுன் 30, 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  சங்கீதம் 31:1-7; 2கொரிந்தியர் 1:2-4 ?  ஆத்துமாவின் ஆறுதல் என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. சங்கீதம் 94:19 எனது வாழ்க்கையின் ஒரு காலப்பகுதியிலே தனித்துவிடப்பட்டேனோ என்ற ஒரு உள்ளுணர்வோடு போராட நேர்ந்தது. அடுத்த அடி எங்கே எப்பக்கம் வைப்பது என்று அறியாமல் திகைத்து நின்றேன். ‘நான் தடுமாறிவிழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது.

ஜுன் 29, 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 73:1-28 ? என்னைத் தாங்கிடும் கிருபை என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. சங்கீதம் 94:18 நமது வாழ்க்கைப் பாதை நமக்கு எப்போதும் நியாயமானதாகவே தெரிகிறது. நமது நினைவுகளும் திட்டங்களும்கூட சரியானதாகவே தோன்றுகின்றன. வீதியிலே ஒரு சரியான நோக்கோடு நடந்துசெல்லும் ஒருவர், நினையாத நேரத்தில் பாதையிலுள்ள சிறுகுழியிலும் மண்மேடுகளிலும் கால் சிக்கி விழுந்து விடுகிறார்;

ஜுன் 28, 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோபு 23:1-10 ?  என்னைத் தொடரும் கண்கள் ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். யோபு 23:10 இந்த அறிக்கையைச் செய்த யோபு பக்தன் கடந்துசென்ற பாதை எப்படிப்பட்டது என்பதை நாம் அறிவோம். இங்கு அவர், ‘ஆனாலும்” என்று கூறுவதைக் கவனியுங்கள். அவரது அங்கலாய்ப்புகளை உணர்ந்துகொள்வார் யாரும் இருக்கவில்லை; அவர் முரட்டாட்டம் பண்ணுகிறவராகத் தன் நண்பர்களினால் கணிக்கப்பட்டார்; மனைவிகூட அவரை உதறிவிட்டாள். இந்த

ஜுன் 27, 2020 சனிக்கிழமை

குறிப்பு- வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 25 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். நன்றி. – தொகுப்பாசிரியர். ? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  25:39-44 ?  கல்லைப்போலான இருதயம்! கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார்… 1சாமுவேல் 25:39 ?

ஜுன் 26, 2020 வெள்ளி

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 142:1-7 ?♀️  என் பாதையை அறிந்தவர் என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர். சங்கீதம் 142:3 ‘சஞ்சலமும், நெருக்கமும் என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது; ‘நல்லது’ என்று நான் கண்டுகொண்ட வழிகளிலெல்லாம் மறைவான கண்ணிகள் என்னை விழத்தள்ளி அகப்படுத்திக் கொள்கின்றன; உதவிக்காக வலதுபுறம் திரும்புகிறேன்; என்னைப் புரிந்துகொள்வார் யாருமில்லை; இடதுபுறம் திரும்புகிறேன்; யாவும் வெறுமையாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருக்கிறது. நான் தனித்து

ஜுன் 25, 2020 வியாழன்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 2:11-14 ?  அவருடைய காலடிகளில் எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லி …தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்திதினால் எலிசா இக்கரைப்பட்டான். 2 இராஜாக்கள் 2:14 ‘ஒரு சிறுவன் பின்பற்ற விரும்பும் காலடிகள், தன் தகப்பனார் நடந்து முடித்துவிட்டதாக நினைத்து மூடிவிட்ட காலடிகளாகும்” என்றார் ஒருவர். ஆனால் எலியாவின் வாழ்க்கையில் அப்படி இல்லை. எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: ‘எலியாவின்

ஜுன் 24, 2020 புதன்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 2:9-12 ? சுழல்காற்றின் மத்தியில் அவர்கள் பேசிக்கொண்டு நடந்து போகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. 2இராஜாக்கள் 2:11 கழுகுகள் ஒரு வித்தியாசமான பறக்கும் பழக்கத்தைப் பெற்றுள்ளன. அவை புயல் வீசும்போது பெருங்காற்றைக் கண்டு பயந்து தூரமாகப் பறந்துசெல்லாமல், அதை நேருக்கு நேராக சந்திக்கும் தன்மை உடையவை. மற்றப் பறவைகள் பயந்து தூர விலகிப்

ஜுன் 23, 2020 செவ்வாய்

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  2இராஜாக்கள் 2:6-10 ?  வெளிச்சம் இன்னும் பிரகாசிக்கட்டும். எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான். அது இருபக்கமாகப் பிரிந்தது. அவர்கள் …அக்கரைக்குப் போனார்கள். 2இராஜாக்கள் 2:8 ஆண்டவருக்குச் சேவைசெய்தல் இளைஞர்களுக்கு மட்டும் உரியதல்ல. ஜான் வெஸ்லி என்ற புகழ்பெற்ற தேவ ஊழியர், தனது 90வது வயதில் மரணமடையும் வரை பிரசங்கம் செய்தார். புளாரிடாவிலுள்ள மகதலேனா ஏரியைச் சேர்ந்த கிளாடிஸ் ஸ்டால், 82

ஜுன் 22, 2020 திங்கள்

? சத்தியவசனம் – இலங்கை. ?? ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 2:1-7 ? படிப்படியாக கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது எலியா, எலிசாவோடே கூடக் …புறப்பட்டுப்போனான். 2இராஜாக்கள்  2:1 தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரு மனிதன் தன் வாகனத்தை ஓட்டிச் சென்றான். திடீரென ஒரு அடர்த்தியான மூடுபனிக்குள் அகப்பட்டான். எதிரே இருப்பதை அறியமுடியாத ஆபத்தான சூழ்நிலையில், என்ன செய்யலாம் என்று அவன் திகைப்புடன் சிந்தித்தான். பெரிய விளக்குகளின் ஒளி எதிரே சாலையில்

ஜுன் 21, 2020 ஞாயிறு

? சத்தியவசனம் – இலங்கை. ??  ? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2 இராஜாக்கள் 1:5-17 ?  தேவன் பாதுகாக்கிறார். உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது. 2இராஜாக்கள் 1:10 இரவு நேரத்தில், முரட்டுத்தனமான போர்வீரர்கள் ஜேர்மன் நாட்டின் ஸ்லெஸ்விக் நகர வீதிவழியே சென்றனர். கடுங்குளிரின் மத்தியிலும், வீடுகளின் கதவைத் தட்டி, உள்ளே புகுந்து, சூறையாடி, மக்களைத் துன்புறுத்தியதால், மக்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தனர். அந்நகாpல், ஒரு மூதாட்டி, தனது விதவையான மகள்,