? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 10:29-37

எனக்குப் பிறன் யார்

…காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, …அவனைப் பராமரித்தான். லூக்கா 10:34

தேவனுடைய செய்தி:

நாம் சக மனிதரிடம் இரக்கம் காட்டுவதைத் தேவன் எதிர்பார்க்கின்றார். தியானம்: திருடர்கள் கையில் மாட்டிக்கொண்ட ஒரு வழிப்பயணி இறக்கும் தருவாயில் கிடந்தான். ஒரு ஆசாரியன், ஒரு லேவியன் அவ்வழியாக சென்றும் உதவி செய்யவில்லை. காயமுற்ற அம் மனிதனிடம் கருணைகொண்ட சமாரியன் காயங்களுக்கு மருந்துகட்டினான். அவனைப் பராமரிப்பதற்காகத் தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து உதவினான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கர்த்தர் மனதுருக்கமுள்ளவர்.

பிரயோகப்படுத்தல்:

நான் நேசிக்கவேண்டிய பிற மக்கள் யார்?

இதுவரை நான் யாரையாகிலும் நேசிக்க முடியாதவனாக, உதவி செய்யாமல், கண்டும் காணாதவனைப்போல நடந்துகொண்டுள்ளேனா?

 என்னிடம் உதவி கேட்க இயலாத நிலையிலுள்ளவர்களிடம் நானாகவே சென்று உதவி செய்த அனுபவமுண்டா?

உங்களுக்குத் தீமை செய்த யாராவது இருக்கிறார்களா? அவர்களைக் குறித்த உங்கள் மனப்பான்மை என்ன?

தேவனைக் குறித்த உங்கள் மனப்பான்மை என்ன? “நீயும் போய் அந்தப்படியே செய்” என்று (10:37) இயேசு கூறுவதன் அர்த்தம் என்ன? இன்று நான் அதை எப்படி செய்யலாம்?

? இன்றைய சிந்தனைக்கு:  

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin