20 பெப்ரவரி, 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி : லூக்கா 3:23-38

ஒரு வம்சவரலாறு

ஆதாம் தேவனால் உண்டானவன். லூக்கா 3:38

தேவனுடைய செய்தி:

இயேசு மனிதனாக வந்த ஆண்டவர் என்பதை லூக்கா வம்ச வரலாறு ஊடாக வெளிப்படுத்துகின்றார். 

தியானம்:

இயேசு யோசேப்பின் மகன் என்று மக்கள் கருதினார்கள். அதன் மத்தியில், இயேசு போதிக்கத் தொடங்குகிறார். 

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

ஆதாமின் வம்சத்தில் இயேசு மனிதனாக பிறக்க வெட்கப்படவில்லை.

பிரயோகப்படுத்தல்:

இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது என்ன?

வசனம் 23ன்படி, ஏன் இயேசு யோசேப்பின் குமாரன் என்று எண்ணப்பட்டார்? அவரை மக்கள் யோசேப்பின் மகன் என்று கருதினரா?

வசனம் 23-38 வரை உள்ள பெயர்களை வரிசைகிரமமாக எழுதுங்கள். இதன்படி, மொத்தம் எத்தனை நபர்கள் உள்ளனர்?

‘குமாரன்” என்ற சொல் எத்தனை தடவை கூறப்படுகின்றது? அதன் அர்த்தம் என்ன?

‘தேவனால் உண்டானவன்” என்பதன் அர்த்தம் என்ன?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

1,880 thoughts on “20 பெப்ரவரி, 2021 சனி