? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:8-20

 இயேசுவின் பிறப்பு 

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும்  உண்டாவதாக. லூக்கா 2:14 

?   தேவனுடைய செய்தி:

‘எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை” நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கின்றோமா?

?  தியானம்:

மந்தையைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு இரட்சகரின் பிறப்பைக் குறித்த அறிவிப்பும் அழைப்பையும் தேவதூதன் கொடுக்கிறான்.

?  விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

பரம இரட்சகரின் வருகையின் நோக்கத்தை அறிவிக்குமுகமாக அவரது அன்பை வெளிப்படுத்தவேண்டும். அவரை அறிவிக்கவேண்டும்.

?  பிரயோகப்படுத்தல் :

வசனம் 10ன்படி, இரட்சகரின் வருகை யாருக்கானது? குறிப்பிட்ட நாட்டினருக்கா? குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமா?

வசனம் 15-16ல், தேவதூதர்கள் மேய்ப்பர்களை விட்டு போன பின்பு, அவர்கள் என்ன செய்தனர்…. ‘தீவிரமாய் வந்து” என்பதில் என்ன கருதுகிறீர்கள்?

சமூகத்தால் உயர்வாக மதிக்கப்படாத, ஒதுக்கப்பட்ட யாராவது ஒருவருக்கு  கிறிஸ்துவின் நற்செய்தியை அண்மையில் அறிவித்ததுண்டா? இவ்வாரத்தில் ஆகிலும் அதைச் செய்வீர்களா?

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சிருஷ்டிகரின் பிறப்புக்கு சத்திரத்தில்  இடமில்லாமல் போது ஏன்? மரியாள் அல்லது யோசேப்பின் ஸ்தானத்தில் நீங்கள் இருந்திருந்தால், எப்படிப்பட்ட சிந்தனை எண்ணம் ஏற்பட்டிருக்கும்?

? இன்றைய எனது சிந்தனை:

Solverwp- WordPress Theme and Plugin