? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 14:15-24

ஒரு பெரிய விருந்து

…தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான். லூக்கா 14:15

தேவனுடைய செய்தி:

கர்த்தர் அனைவரையும் தம்முடைய பந்திக்கு அழைத்துள்ளார்.

தியானம்:

ஒரு பெரிய விருந்து. விருந்தினர்கள் பலர் தம்மால் வர இயலாது என்று சாக்குப்போக்குக் கூறினார்கள். ஒருவன், “நான் ஒரு வயலை வாங்கியதால் அதைப் பார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னிக்கவும்” என்றான். இன்னொருவன், “ஐந்து ஜோடி ஏர்மாடுகள் வாங்கி இருக்கிறேன். அதை சோதித்துபார்க்கப் போகவேண்டும். தயவுசெய்து மன்னித்துகொள்” என்றான். மூன்றாமவன், “எனக்கு இப்பொழுதுதான் திருமணமாயிற்று. நான் வர முடியாது” என்றான். ஆகவே, எஜமான், வீடு முழுவதும் ஆட்களால் நிரம்பி இருக்கும் படி ஏழையோ, அங்கவீனரோ, குருடரோ, முடவரோ, எல்லாரையும் அழைப்பித்து நன்றாக விருந்தளித்தான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

ஆண்டவருடைய ராஜ்யத்திற்குள் அநேகரை அழையுங்கள். ஏனெனில், இன்னும் இடம் இருக்கிறது.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 21ன்படி, “நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா” என்ற எஜமானின் கட்டளைக்கு வேலைக்காரனின் பதில் என்னவாயிருக்கும்? எனது பதில் என்ன?

“ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது” என்று கூறுவதன் அர்த்தம் என்ன?

வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்தி அழைப்பதன் நோக்கம் என்ன? இன்று உங்களை தேவன் வருந்தி அழைப்பதை உணர்ந்துள்ளீர்களா?

அழைக்கப்பட்டவர்கள் தமது அழைப்பை தவறவிடுவதேன்? ஏன் அவர்களால் விருந்தை ருசிபார்க்க முடியாமற் போயிற்று?

? இன்றைய எனது சிந்தனை:

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *