குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 28 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  28:20-25

?  தண்டனை

நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள். இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார்… 1சாமுவேல் 28:19

? தியான பின்னணி:

கர்த்தரை தேடாமல், கர்த்தர் கூறியவற்றிற்கு கீழ்ப்படியாத சவுலின் மீது தேவனுடைய தண்டனை நிறைவேறப்போகின்ற நேரம் வந்தது.  

? பிரயோகப்படுத்தல் :

❓ சவுலிடம் அதைரியப்படுத்தும் வார்த்தைகளைக் கூறியது யார்? அவனை வஞ்சித்தது யார்? கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்காதவர்களின்  முடிவு எப்படிப்பட்டது?

❓ கர்த்தருடைய ஆலோசனையின்படி நடக்காத சவுலுக்கு ஆலோசனை கூற யாரும் இல்லை! நம்மில் எத்தனைபேர் இன்று சவுலைப்போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

❓ இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்த சவுல் (வச 20), புசிக்கமாட்டேன் (வச 23) என்றவன், அஞ்சனக்காரியின் கைகளினால் சமைக்கப்பட்ட இறைச்சியையும் அப்பங்களையும் பின்பு புசித்ததேன்? சவுலும் அவனது ஊழியக்காரரும் எப்படிப்பட்டவர்கள்? ஏன் இப்படி நிலையற்றவர்களாக மாறினார்கள்?

❓ உங்களுடன் தேவன் எவ்வாறு பேசுகிறார்? வேத வார்த்தைக்கூடாகவா? உங்களோடு கர்த்தர் பேச நீங்கள் சொப்பனம், தீர்க்கதரிசனம், தீர்க்கதரிசிகள், ஊழியர்களிடமா தங்கியுள்ளீர்கள்? ஏன்?

? தேவனுடைய செய்தி:

▪️ தேவனுடைய வார்த்தையாகிய முழுமையான வேதாகமம் நமக்குண்டு.  பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலும் நமக்குண்டு. அதைவிட்டு எப்பொழுதும் விலகாதிருப்போம்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

உண்மையுடன் பொய்யையும் கலந்துபேசுபவன் சாத்தான். அவனால் வஞ்சிக்கப்பட்டவர்கள் பலர்.

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whatsapp: +94768336006

Comments (1)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *