? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 8:40-42, 49-56

யவீருவின் குமாரத்தி

பயப்படாதே. விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். லூக்கா 8:50

தேவனுடைய செய்தி:

காலதாமதமானாலும், எந்தச் சூழ்நிலையானாலும் நாம் பயப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக ஜீவிக்கவேண்டும்.

தியானம்:

ஜெப ஆலயத்தலைவனாகிய யவீருவுக்கு பன்னிரண்டு வயதுள்ள ஒரே குமாரத்தி மரித்துப் போனாள். இயேசுவோ, “அழாதீர்கள், இவள் இறக்க வில்லை, உறங்குகிறாள்” என்றார். பின்பு சிறுமியின் கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நமது தேவைகளைக் குறித்து இயேசு அக்கறையுள்ளவர்.

பிரயோகப்படுத்தல் :

யவீருவைப்போல, இயேசுவின் காலில் விழுந்து, எக்காரியத்திற்காக, எப்போது நான் கடைசியாக மன்றாடினேன்?

சாகும் தறுவாயிலிருந்த மகள் மரித்துவிட்டாள் என்று கேள்விப்பட்ட தந்தையின் உணர்வு எப்படியிருந்திருக்கும்?

வசனம் 52-53 ன்படி, மகள் மரித்துப்போனாளென்று அறிந்த ஜனங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்ற இயேசுவைப் பார்த்து நகைத்தார்கள். இன்றும் இப்படி, இயேசுவின் வார்த்தைகளைக் குறித்து நகைப்பவர்களை அறிந்துள்ளீர்களா?

சிறுமியின் கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்திடு!” என்று கூப்பிட்டபோது, உயிர் மூச்சுத் திரும்பி வரவே, உடனே அவள் எழுந்தாள், இயேசு அவளுக்கு உடனடியாக உணவு கொடுக்கக் கட்டளையிட்டார்.

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin