📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 11:14-28

இயேசுவின் வல்லமை

தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்… லூக்கா 11:28

தேவனுடைய செய்தி:

தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதை நாம் உணர்ந்திட அறிந்திட அதிலே வாழ்ந்திட வேண்டும்.

தியானம்:

ஊமையான ஒரு மனிதனிடமிருந்து பிசாசை இயேசு துரத்தினார். அத்துடன், பல ஆயுதங்கள் ஏந்திய ஒரு வலிய மனிதன் தன் சொந்த வீட்டைக் காவல் காக்கும்போது அவன் வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்ற சத்தியத்தை எடுத்துரைக்கின்றார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவ வார்த்தையைக் கேட்போம். அதை இருதயத்தில் காத்துக்கொள்வோம்.

பிரயோகப்படுத்தல் :

தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே என்றால் என்ன என்று இயேசு கூறுகின்றார்? ஒருவன் என்னோடு இருக்கவில்லை என்றால், அவன் எனக்கு எதிரானவன். என்னோடு வேலை செய்யாதவன் எனக்கு எதிராகச் செயல் புரிகின்றான். என இயேசு கூறுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளேனா?

எந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்?

தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறேனா?அதிக பாக்கியவான்களாக இருப்பது எப்படி?

“உங்களைப் பெற்றெடுத்து தன் மார்பில் பால் ஊட்டிய உங்கள் தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என ஒரு ஸ்திரீ கூறியபோது இயேசுவின் பதில் என்ன? இன்று உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன கூறுவார்கள்?

💫 இன்றைய சிந்தனைக்கு:

——————————————————————————————————————–

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (31)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *