? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேத பகுதி : எபேசியர் 5:8-20

காலத்தைப் பயன்படுத்து

இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள், வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8

வயோதிபத் தாயார் ஒருவர் கால்முறிந்து வைத்தியசாலையில் இருந்தபோது அவரைபார்க்கச்சென்று அவரை விசாரித்தேன். தான் நடைபாதை வழியாகச் சென்றுகொண்டி ருந்தபோது, பின்னால் வந்த மோட்டார் வண்டி தன்னை மோதியதால்தான் இந்த விபத்து நடந்தது என்றார் அவர். வாகனத்தைச் செலுத்துவதற்கான உறுதிப்பத்திரத் தைப் பெற்றுக்கொள்வதற்கு வாகனத்தை நன்றாக ஓட்டினால் மாத்திரம் போதாது; வீதி ஒழுங்குகளையும் சரியாகப் படித்துப் பரீட்சையில் சித்தியாகவேண்டும். வாகனத் தைச் செலுத்தும்போது வீதி ஒழுங்குகளைச் சரிவரக் கடைப்பிடிக்காவிடில் நிச்சயமாக அது விபத்தில்தான் கொண்டுபோய்விடும் என்பதில் ஐயமில்லை.

அதுபோலவே கிறிஸ்தவ வாழ்விலும் எப்படி வாழவேண்டும் என்றதான ஒரு ஒழுங்கு முறையுண்டு. எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து இப்படித்தான் வாழவேண்டும் என்று தேவனுடைய வார்த்தை எமக்கு எடுத்தியம்புகிறது. நாமும் சிலவேளைகளில் தேவனுடைய வார்த்தையை விட்டு வெகுதூரம் இஷ்டம்போல் பயணித்துவிடுவதுண்டு. சிலவேளைகளில் எங்காவது முட்டிமோதி நிற்கும்போதுதான், ‘ஐயோ! எங்கேயோ தவறிவிட்டோமே” என்று உணர்ந்துகொள்வதும் உண்டு. எம்மை நிதானித்து பார்க்க ஒரு தருணம் என்று சொன்னால் அது தபசுகாலங்கள்தான். இன்று சாம்பல்புதன் ஆராதனைக்குச் செல்ல நாம் ஆயத்தமாக இருக்கலாம். இன்றோடு தபசுகாலங்கள் ஆரம்பமாகிறது. இக்காலங்களை வீண்விரயம் செய்யாமல் எம்மை நிதானித்து அறிந்து கொள்ளும்படியாக தேவபாதத்தில் அமர்ந்திருக்க ஒப்புக்கொடுப்போம்.

வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளும்படிக்கு கனியற்ற அந்தகாரக் கிரியை களுக்கு உடன்படாமல் ஆவியின் கனியைத் தரித்துக்கொள்ளுங்கள். கர்த்தருக்குப் பிரியமானது என்ன என்பதைச் சோதித்துப்பார்த்து அதனைப் பற்றிக்கொள்ளுங்கள். நாம் தூங்குகிறவர்களாய் இராமல் விழித்து எழுந்து கிறிஸ்துவால் பிரகாசிக்கப்படத் தக்கவர்களாய் இருக்கவேண்டும். ஞானமற்றவர்கள்போல நடவாமல், ஞானமுள்ளவர்களாய் நடக்கவேண்டும். நாட்கள் பொல்லாதவைகளானதால் மதியற்றவர்களாயி ராமல் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். இருதயத்தில் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி ஞானப்பாட்டுக்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரம் பண்ணுங்கள். இத்தனை காரியங்களையும் பவுல் எபேசியருக்கு மாத்திர மல்ல, நமக்கும்தான் எழுதியுள்ளார். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105

? இன்றைய சிந்தனைக்கு:

வெளிச்சத்தின் பிள்ளையாய் நடப்பது என்பது என்ன? இக் காலத்தை நான் பிரயோஜனப்படுத்துகிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin