? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமு 30:20-31 

சமமான பங்கு

கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக் கொடுத்தார். 1சாமுவேல் 30:23 

தேவனுடைய செய்தி:

எல்லோருக்கும் சமமான பங்கு கிடைக்க நாம் செயற்படவேண்டும். 

தியானம்:

அமலேக்கியரை ஜெயித்த தாவீது அவர்களைக் கொள்ளையிட்டு திரும்பி வருகிறான். அவனுடன் கடைசிவரை யுத்தத்தில் கலந்துகொள்ளாதவர்களை சந்தித்தவுடன், அவர்களுக்கும் கொள்ளையில் சமபங்கை கொடுக்கும்படி தாவீது புதிய ஒழுங்குவிதியை நியமங்களை ஏற்படுத்துகின்றான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பட்சபாதம் பார்க்கக்கூடாது.

பிரயோகப்படுத்தல் :

அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளை உடைமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை (30:22) எனக் கூறிய வர்கள் எப்படிப்பட்டவர்கள் என வசனம் கூறுகின்றது?

இலாபத்தில் பங்கை நாம் சமமாக பிரிக்கின்றோமா? கொடுக்கும் மனப் பான்மையுடன் நாம் நடந்துகொள்கிறோமா?

‘தன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பினான்” தாவீது. நாம் பிறருக்கு பரிசு பொருட்களைக் கொடுப்பதுண்டா?

 எமக்கு கீழ் வேலை செய்கிறவர்கள், ஏழைகளுக்கு நாம் அன்பளிப்பு கொடுத்த அனுபவமுண்டா? தேவன் எம்மை ஆசீர்வதித்திருந்தும், பிறருக்கு ஆசீர்வாதமாக இராத வேளை இருந்தால் மனந்திருப்புவோமாக.

பிறருக்கு கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை தடைசெய்கின்ற நபர்களாக நாம் இருந்தது செயற்பட்டதுண்டா?

எனது சிந்தனை:

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532


? அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *