? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 2:40-52

 தேவாலயத்தில் ஒரு சிறுவன்

இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார். லூக்கா 2:52

தேவனுடைய செய்தி:

தேவ திட்டத்திற்கும், சித்தத்திற்கும் கீழ்ப்படிந்திருந்தாலும், ‘தேவனுடைய செயற்பாடுகளை” புரிந்துகொள்வது சிலநேரம் கடினமே.

தியானம்:

வருடந்தோறும் யூதமுறைப்படி பஸ்கா பண்டிக்காக எருசலேம் நகருக்கு யோசேப்பும் மரியாளும் சென்றுவந்தனர். ஒருமுறை நாசரேத் திரும்புகையில் இயேசுவை காணாமல் திரும்பி வந்தபோது அவரை எருசலேம் ஆலயத்தில் கண்டனர்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவனது செயற்பாடுகளை பூரணமாக புரிந்துகொள்ளாவிட்டாலும், அவற்றை மறக்காது இருதயத்தில் பொக்கிஷமாக வைத்திருக்கவேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 41-42ன்படி யோசேப்பு, மரியாளைக்குறித்து அறிவது யாது?

யூத முறைமையின்படி வயதுவந்த ஆண், வருடத்திற்கு 3 முறை (உபாகமம் 16:16) எருசலேம் ஆலயம் செல்ல வேண்டும். வசனம் 43ன்படி இப்பிரச்சனைக்கு காரணம் யார்? இயேசுவா? மரியாளா? யோசேப்பா?

‘ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?”, ‘விசாரத்தோடே தேடினோமே” என்ற மரியாளின் வார்த்தைகளைக் குறித்த உங்கள் அபிப்பிராயம் என்ன?

பிள்ளையைக் காணாவிட்டால் பெற்றோர் தேவடுவது தவறா? அப்படியானால், ஏன் இயேசு வசனம் 49ல், அப்படிக் கூறுகின்றார்?

பதிலை அவர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், வசனம் 51ல் இயேசுவானவர் செய்கையிலிருந்து எதை விளங்கிக்கொள்கின்றீர்கள்?

உங்களது வாழ்க்கையிலும் தேவன் செயலாற்றும் காரியங்கள் புரியாமல் உள்ளதா? இயேசு சிந்தித்ததுபோல, ‘தேவ பிதாவிற்குரிய காரியங்கள்” எமது முதன்மை ஸ்தானமாக உள்ளதா?

? இன்றைய எனது சிந்தனை:

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532


? அனுதினமும் தேவனுடன்.

Comments (211)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *