📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 9:22-36

மனுஷகுமாரன்

இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று … அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். லூக்கா 9:35

தேவனுடைய செய்தி:

மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

தியானம்:

பேதுரு, யோவான், யாக்கோபு உடன் இயேசு ஜெபம்பண்ண ஒரு மலை மீது ஏறினார். ஜெபிக்கையில், அவரது முகரூபம் மாறி, வஸ்திரமும் வெண்மையாய் பிரகாசித்தது. அவருடன் மோசேயும், எலியாவும் உரையாடி னார்கள். பின்பு, ஒரு மேகம் நிழலிட, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று ஒரு சத்தமுண்டாயிற்று.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

மனுஷகுமாரனாகிய இயேசு தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமை யோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் மீண்டும் வருவார்.

பிரயோகப்படுத்தல் :

வசனம் 22ன்படி மனுஷகுமாரனைக் குறித்து கூறப்படுவது என்ன?

வசனம் 23ன்படி, ஒரு கிறிஸ்தவன் எப்படி இயேசுவைப் பின்பற்றவேண்டும்?

இயேசுவின் வார்த்தைகளைக்குறித்து கூற வெட்கப்படுகிறவனைக் குறித்து இயேசு என்ன கூறுகின்றார்?

இயேசுவின் சிலுவை மரணத்தைக்குறித்து பேசிக்கொண்டவர்கள் யார்?

இயேசுவின் வார்த்தைக்கு நாம் செவிகொடுக்க தவறிய சந்தர்ப்பங்களைக் குறித்து மனந்திரும்பியதுண்டா?

💫 இன்றைய எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *