📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 15:11-32
ஒரு தகப்பனின் இருதயம்
…மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. லூக்கா 15:31
தேவனுடைய செய்தி:
பூமியில் பாவங்களை மன்னிக்க, தேவ குமாரனுக்கு அதிகாரம் உண்டு.
தியானம்:
இளையமகன் கேட்டுக்கொண்டதால் ஒரு தந்தை தனது செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுத்தபோது, இளையமகன் தூரதேசம் சென்று அதைச் செல வழித்தான். அவரது மகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்ல என்பதை உணர்ந்தபோது இளையமகன் தகப்பனைத் தேடி வந்தான். இதைக்கண்ட மூத்தமகன் தந்தையோடு கோபித்துக்கொண்டாலும், தந்தையோ, இழந்துபோன உறவு புதுப்பிக்கப்பட்ட சந்தோஷத்தில் விருந்துண்டு மகன்மாரை அரவணைத்தார்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ் செய்தேன்.(லூக் 15:18)
பிரயோகப்படுத்தல் :
பெற்றோருடனான எனது உறவு இன்று எப்படியுள்ளது? எனக்கு வரும் பங்கைக்கேட்டு சொத்து பாகப்பிரிவினை வாங்குகிறேனா? அல்லது அவர்களோடு சேர்ந்து வாழ்வதினால் வரும் மகிழ்ச்சியை அனுபவிக்கிறேனா?
“என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.” இந்த உணர்வு எப்படிப்பட்டது? “உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும்” இந்த உணர்வு எப்படிப்பட்டது?
“நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.” என்ற தந்தையின் மகிழ்ச்சியுள்ளம் என்னிடமுண்டா? நாம் சந்தோஷப்பட்டு எதில் மகிழ்ச்சியாயிருக்கவேண்டும்?
“இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து” என்ற மூத்த மகன் எதிலே மனந்திரும்ப வேண்டியிருந்தது?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.
