குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 27 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  27:1-4

?  தவறான சிந்தனையும் உணர்வும்

அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன். யோபு 13:15

? தியான பின்னணி:

ஏறக்குறைய 8 வருடங்களாக, சவுலின் பார்வையிலிருந்து தப்பிய தாவீது, அநேக முயற்சிகளையும், பிரயாணங்களையும் மேற்கொண்டு, சரீர ரீதியிலும், உள ரீதியிலும் களைப்படைந்த தாவீது, நம்பிக்கையற்று, மரணத்திலிருந்து தப்ப ஒரே வழி என மனதில் எண்ணி, தனது குடும்பத்தினர், நண்பர்கள், வீரர்களுடன் பெலிஸ்திய நகரான காத்தின் அரசனிடம் தஞ்சம் கோருகிறான். அங்கே அவனிடம் தங்கியிருக்கிறான்.

? பிரயோகப்படுத்தல் :

❓ எங்கு சென்றால் நான் தப்ப முடியும் என தாவீது யோசித்தான்? பெலிஸ்திய காத் பட்டணம் குறித்து நினைவுக்கு வரும் காரியம் என்ன? எந்த நாட்டிற்குள் இருந்தால் தனக்கு ஆபத்து என தாவீது சிந்தித்தான்?

❓ அநேக காலமாக ஜெபித்தும், ஒரு மாற்றமும் ஏற்படவில்லையே என கருதும் காரியங்கள் உங்கள் வாழ்வில் உண்டா?

❓ தான் கொலை செய்த கோலியாத்தின் சொந்த நகரான காத்திற்கு செல்லும் தாவீதின் செயலைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இன்று நீங்கள் எதிலிருந்தாவது தப்பியோட முயற்சிக்கிறீர்களா? சரியான நபரிடம் செல்கிறீர்களா? சரியான இடத்திற்கு செல்கிறீர்களா?

❓ வசனம் 4ன் படி, சவுல் தாவீதை தேடாதற்கு காரணம் எதுவாக இருக்கும்? சில நபர்களின் செயல்பாடுகளை வருத்தம் தந்தால், அதற்கு நீங்கள் எப்படி முகங்கொடுக்கின்றீர்கள்?

? தேவனுடைய செய்தி:

▪️ தவறான சிந்தனை, தவறான உணர்வுக்குள் இட்டுச் செல்லும்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தப்பினோம் என நினைத்தாலும், தவறான இடத்தில் இருப்போமானால், அது தேவனுக்கு உகந்ததல்ல.     

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin