📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: மத்தேயு 6:21, யோவான் 12:1-6

என் இருதயம் எங்கே?

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். மத்தேயு 6:21

நம்முடைய கை விரல்களை இறுகப் பொத்திப்பிடித்தால் அதுதான் நமது இருதயத் தின் அளவு என்று சொல்லுவார்கள். இந்த இருதயமே நாம் உயிர் வாழ்வதற்கு நமது சரீரத்தை இயக்குகின்ற பெரிய இயந்திரம். இந்த மாம்ச இருதயம் சிறியதாக இருந்தாலும், நமது வாழ்வுக்கு மிக மிக முக்கியமானது என்றால், நமது ஆவிக்குரிய இருதயம் நமது வாழ்வின் அத்திபாரமாக ஆணிவேராக இருக்கிறது என்றால் மிகையாகாது. அந்த இருதயத்தை நாம் பத்திரமாகப் பாதுகாத்து, அது இருக்கவேண்டிய இடத்தில் அதை வைத்திருக்கவேண்டியது மிக மிக அவசியமல்லா! இந்த இருதயம் எதை நோக்கி இருக்கிறதோ அதை நோக்கியே நமது வாழ்வும் செல்லும். நமது இருதயம் தேவனு டைய வார்த்தைகளால் நிரப்பப்பட்டு, ஆவிக்குரிய சிந்தையைக் கொண்டிருக்குமானால், வாழ்வும் ஆவிக்குரிய தன்மையுள்ளதாகவே இருக்கும். மாறாக, உலக சிந்தனைக ளால் நிறைந்திருந்தால் நமது வாழ்வும் உலகத்துக்கு ஏற்றதாகவே இருக்கும்.

 இயேசுவின் சீஷர்களில் ஒருவன்தான் யூதாஸ். அவன் இயேசுவோடு மூன்று வருடங்க ளாக கூடவே இருந்தான்; ஆனால் அவனுடைய இருதயம் அவரோடுகூட இருக்க வில்லை. வெளியரங்கமாக அவரோடு இருந்தான், திரிந்தான், உண்டான், உறங்கினான். ஆனால் உள்ளான இருதயமோ உலக பொருட்களாலும் பணஆசையாலும் நிறைந்தி ருந்தது. இதனால்தான், மரியாள் விலையேறப்பெற்ற தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றியபோது, “இந்தத் தைலத்தை விற்று தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன?” என்கிறான் யூதாஸ். அவன் ஏழைகளில் கொண்டிருந்த இரக்கத்தால் இப்படிச் சொல்ல வில்லை; மாறாக, அவன் பணஆசை உள்ளவனாக இருந்தான் என்பது தெரிகிறது. அவன் தன் வாழ்க்கையில் பணத்தையே பொக்கிஷமாகக் கருதினான். அந்த பணதிற்காக இயேசுவையும் இழக்க அவன் துணிந்தான். இறுதியில் அவனே தன் வாழ்வை இழந்துபோனான். இன்று நமது இருதயம் எதை நாடி நிற்கிறது? அதைத் தெரிந்துகொள்ள கடினமாக இருந்தால் அதற்கு ஒரே வழி, நமது வாழ்வின் பொக்கிஷமாக நாம் எதைக் கருதுகிறோம் என்பதை உண்மை மனதுடன் ஒப்புக்கொண்டால், நமது இருதயம் எங்கே இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

வீட்டிலே பெரும் தொகைப் பணத்தை ஒருவன் எங்கே மறைத்துவைக்கிறானோ அதன்மீது தானே இராப்பகலாக அவனுடைய சிந்தனை பார்வை எல்லாம் இருக்கும்! அதுபோலவே தான் இதுவும். நாம் பொக்கிஷமாகக் கருதுவது எது? அதை நாம் எங்கே வைத்திருக் கிறோம்? இந்தக் கேள்விகள் இன்று நமது வாழ்வைச் சீர்ப்படுத்தட்டும். நாம் கிறிஸ்த வர்களாக இருப்பது அல்ல; கிறிஸ்துவோடு நமது இருதயம் இருக்கிறதா என்பதே காரியம். சிந்திப்போம்.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

நமது பொக்கிஷங்கள் பரலோகில் சேர்த்துவைக்கப்பட நான் என்ன செய்யவேண்டும் என்பதைச் சிந்தித்து, இந்த நாளில் ஆண்டவரின் சிந்தையால் என் இருதயத்தை நிரப்புவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

One thought on “15 நவம்பர், 2021 திங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin