📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 12:13-21

மூடனான பணக்காரன்

மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்? லூக்கா 12:14

தேவனுடைய செய்தி:

எல்லாவிதமான பேராசைகளைக் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.

தியானம்:

ஒருவனிடம் மிகுந்த செல்வம் இருப்பதைவிட, நித்திய ஜீவனை அவன் பெற்றிருப்பதே முக்கியமானது. உணவுப்பொருள் இவ்வுலகத்திற்குரியது. சரீரத்திற்குரியது. ஆத்துமாவோ அழியாதது. அழியாத ஆத்துமாவிற்காகவே நாம் செயற்பட வேண்டும்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.

பிரயோகப்படுத்தல் :

சொத்து உரிமை கோருதல், பாகம்பிரித்தல், குறித்த உமது சிந்தனை என்ன?

இந்த இரவிலே, உயிர் என்னிடத்திலிருந்து எடுக்கப்பட்டால், சேமித்து வைத்தவைகள் யாருடையவைகளாகும்?

தன்னிடத்தில் செல்வமிருந்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை என்ன?

உங்கள் வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்கின்றீர்கள்? உலகச் செல்வத்திற்கா அல்லது பரலோக நித்திய வாழ்விற்கா?

தேவன் அந்த பணக்காரன மனிதனை முட்டாள் என்று அழைத்ததற்கான காரணம் என்ன? தேவன் நமக்கு தந்த நன்மைகளுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோமா?

எனது சிந்தனை


📘 அனுதினமும் தேவனுடன்.

7,046 thoughts on “15 ஜனவரி, 2022 சனி”