? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 17:1-10

பாவமன்னிப்பும் விசுவாசமும்

…அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. லூக்கா 17:3

தேவனுடைய செய்தி:

சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.

தியானம்:

உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள். ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்து ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்கவேண்டும் என்றார் இயேசு.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசுக்கட்டை மரத்தை நோக்கி, “நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்” எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

பிரயோகப்படுத்தல் :

 “பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு” இதன் அர்த்தம் என்ன? பிறர் பாவம் செய்ய நான் காரணமாய் இருந்ததுண்டா?

வசனம் 10ன்படி, எந்த விசேஷ நன்றியறிதலுக்கும் நாங்கள் தகுதியுடைய வர்கள் அல்ல. நாங்கள் செய்யவேண்டிய வேலையையே செய்து முடித்தோம்” என்று எம்மால் சொல்ல முடியுமா?

 “எங்கள் கடமையைத்தான் செய்தோம்” என்று லஞ்சம் வாங்காமல், அதைக் கொடுக்காமல் ஜீவிக்கிற கிறிஸ்தர்களாக நாம் வாழ்கிறோமா?

 “எங்கள் விசுவாசத்தை மிகுதியாக்கும்” என்று சீடர்கள் கேட்டது சரியா?

சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin