? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 1:26-45

உன்னதமானவரின் நிழல்

?  இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது லூக்கா 1:38

?  தேவனுடைய செய்தி:

தேவனது சத்தத்திற்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பணிவிடை செய்ய வேண்டும்.

?  தியானம்:

யூதர்களின் பார்வையில், மதிக்கப்படாத ஊரான கலிலேயாவிலுள்ள ஒரு வீட்டில், தேவதூதன் இளம்பெண்ணான மரியாளுக்கு தேவனது செய்தியை வழங்க வந்திருந்தான். மரியாள் எவ்வாறு அதை கண்ணோக்கி, கையாளுகிறாள் என்பதைக் காணலாம்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கலக்கம் நேரிட்டாலும், குழம்பிப்போகாமல், தெளிவுடன் தேவனிடம் சரணடைவதே சாலச் சிறந்தது. 

?  பிரயோகப்படுத்தல் :

  • தேவன் உங்களுடன் பேசியும், நீங்கள் இன்னும் கீழ்ப்படியாமல் இருக்கின்றீர்களா? ஏன் கீழ்ப்படிந்தீர்கள்? ஏன் தடுமாறுகிறீர்கள்?
  • வச.28 ல், ‘ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்பதிலிருந்து என்ன விளங்கிக் கொள்கின்றீர்கள்? வசனம் 38 லிருந்து எதைக் கற்றுக்கொள்கின்றீர்கள்?
  • தனக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தை தனிமையில் சந்தோஷத்துடன் அனுபவிப் பதை விட்டு, தொலைதூரம் அதுவும் மலைப்பிரதேசத்திலே நடந்துசென்று, எலிசபெத்துக்கு பணிவிடை செய்ததிலிருந்து கற்றுக்கொள்வது என்ன?
  • வச 42-45 ல் ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள்? ஆவியினால் நிரப்பப்படுவது என்பது எம்மை உயர்த்தவா? மற்றவர்களைவிட நாம் மேலானவர்கள் என்று காட்டவா?

? எனது சிந்தனை: ——————————————————-

?️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Comments (116)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *